தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல்! மூவர் கைது இருவர் தப்பியோட்டம்!

Photo of author

By Rupa

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல்! மூவர் கைது இருவர் தப்பியோட்டம்!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாளுக்காவிற்கு உட்பட்ட பள்ளிகொண்டா பகுதியில் தொடர்ந்து காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பள்ளிகொண்டா காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது, அதன் பெயரில் பள்ளிகொண்டா ஹரி கேஸ் குடோன் அருகில் உதவி ஆய்வாளர் ராஜ்குமாரி தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டு இருந்தது.மேலும் போலீசாரை பார்த்ததும் 5 பேர் கொண்ட கும்பல் தெரித்து ஓடின. இதனை மடக்கி பிடித்த போலீசார் 3 பேரை கைது செய்தனர், மீதம் 2 பேர் தப்பியோடிவிட்டனர்.

அப்போது அவர்களை விசாரித்ததில் அவர்கள் குடியாத்தம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் ( 40), விஜயகுமார் (37), முகமது பாசில் வயது 20 ஆகியவர்கள் என தெரியவந்தது.மேலும் தப்பியோடிய அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், மற்றும்
மஸ்தான் என்கின்ற 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.இதனையடுத்து அவர்களிடமிருந்து ஏராளமாக லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்பு கைது செய்யப்பட்ட 3 பேரின் மீது வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.