Gas Trouble? இதை குடித்த நொடியில் குடலில் தேங்கிய கெட்ட வாயுக்கள் வெளியேறும்!!
ஆரோக்கியமற்ற உணவுகளால் குடலில் அதிகளவு கெட்ட வாயுக்கள் உருவாகிறது.இதனால் தர்ம சங்கடமான சூழல் நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் ஏற்படுகிறது.எனவே இந்த வாயுத் தொல்லையில் இருந்து விடுபட இந்த வைத்திய குறிப்புகள் தங்களுக்கு உதவும்.
தேவையான பொருட்கள்:-
1)அரைக்கீரை
2)சீரகம்
3)பூண்டு
4)மஞ்சள் தூள்
5)உப்பு
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் 1/4 கைப்பிடி அளவு அரைக்கீரை நறுக்கி போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அரைக்கீரையை சேர்க்கவும்.அதன் பின்னர் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
பின்னர் 2 பல் பூண்டு மற்றும் 1/4 தேக்கரண்டி சீரகத்தை உரலில் போட்டு இடித்து கீரையில் சேர்க்கவும்.பிறகு 1/4 தேக்கரண்டி மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் பாதியாக சுண்டி வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி குடித்தால் குடலில் தேங்கிய கெட்ட வாயுக்கள் ஆசனவாய் மூலம் வெளியேறி விடும்.
மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
1)தயிர்
2)ஓமம்
செய்முறை:-
கால் தேக்கரண்டி ஓமத்தை வறுத்து பொடி செய்து ஒரு கப் தயிரில் கலந்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.
அதேபோல் வாயுத் தொல்லை இருப்பவர்கள் இளநீர் குடிப்பதன் மூலம் நல்ல தீர்வு காணலாம்.ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு ஸ்பூன் அளவு நீரில் கலந்து குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும்.பெருஞ்சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் குடலில் தேங்கிய கெட்ட வாயுக்கள் அகலும்.