மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழும் நாள்!

0
78
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழும் நாள்!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழும் நாள். குடும்ப உறவு அருமையாக உள்ளது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை மிக சிறப்பாக உள்ளது.

பொருளாதாரம் சிறப்பாக உள்ளதால் முன்னேற்ற பாதையில் செல்வீர்கள். வருமானம் வந்து சேர்ந்தாலும் சில செலவுகளும் கூடவே வந்து சேரும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். கலைத் துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடைய அணிந்து குரு பகவான் ராகவேந்திர ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்.