மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! வெற்றிகள் குவியும் நாள்!

0
145
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! வெற்றிகள் குவியும் நாள்!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வெற்றிகள் குவியும் நாள். சந்திர பகவான் பாக்கியஸ்தானத்தில் இருப்பதால் வெற்றிகள் வந்து சேரும். நிதி அருமையாக வந்து சேரும்.

கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த குழப்பமான சூழ்நிலை மறையும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் தந்தை வழி உறவினர்களின் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகள் நடைபெறும். அரசியல்வாதிகளுக்கு இது கொண்டாட்டமான நேரம். கலைத்துறை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடைய அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் எந்த நாள் உங்களுக்கு இனிமை தரும் நாளாக அமையும்.

Previous articleஒற்றை தலைவலிக்கு இந்த ஒரு பொருள் நிரந்தர தீர்வு! இப்படி பயன்படுத்துங்கள்!
Next articleகேன்சரை உண்டாக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்!! மக்களே உஷார்!!