மீண்டும் பொது முடக்கம்!! முழு ஊரடங்கு!! மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்!!
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு பொது முடக்கம் அமலுக்கு வந்தது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பின் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா தளர்வுகள் நிகழ்த்தப்பட்டது.
தற்போது தேர்தல் முடிவுகளுக்கு பின் மே மாதம் 31 ஆம் தேதி வரை மீண்டும் பொது முடக்கம் அமலுக்கு வரும் எனவும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
புதிய கட்டுப்பாடுகள் பின்வருமாறு:
1) அத்தியாவசிய தேவைகளை தவிர பிற சேவைகளுக்கான நடவடிக்கைகளுக்கு இரவு நேரத்தில் தடை விதிக்க வேண்டும், இரவுநேர ஊரடங்கிற்கான நேரத்தை அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ள வேண்டும். நிலைமையை பொறுத்து 144 தடையுத்தரவையும் விதித்துக் கொள்ளலாம்.
2) சமூக, அரசியல், கலாசாரம், விளையாட்டு, பொழுதுப்போக்கு, கல்வி, மதம், திருவிழா சார்ந்த நிகழ்வுகள் மற்றும் இதர கூட்டங்களுக்கு தடை.
3) திருமணத்தில் 50 பேரும், இறுதிச் சடங்கில் 20 பேரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
4) அனைத்து ஷாப்பிங்க் காம்ப்ளக்ஸ், சினிமா தியேட்டர்கள், ரெஸ்டரெண்டுகள், பார்கள், ஜிம்கள், அழகு நிலையங்கள், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், மதவழிபாட்டு தலங்கள் மூடப்பட வேண்டும்.
5) சுகாதார சேவைகள், வங்கிகள், காவல்துறை, தீயணைப்பு துறை, நீர் மற்றும் சுகாதார சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான அனைத்து சேவைகளை மேற்கொள்ளும் அரசு, தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கபடுகிறது. இதற்கான போக்குவரத்தும் அனுமதிக்கப்படுகிறது.
6) ரயில்கள், மெட்ரோ, பேருந்து, வாடகை கார்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து 50 சதவீதத்துடன் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.
7) அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மாநிலங்களுக்கு இடையேவோ, மாநிலங்களுக்கு உள்ளேயோ தடை ஏற்படுத்தக் கூடாது.
8) அரசு, தனியார் நிறுவனங்கள் அனைத்தும் அதிகபட்சமாக 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.
9) வீட்டில் இருந்தே பணி செய்வதை நிறுவனங்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.
10) இருப்பினும், நிலைமைக்கு ஏற்றவாறு அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம். மேற்கண்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் அடுத்த 14 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும்.அத்துடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அனுமதிக்கப்பட்ட வயதினருக்கான தடுப்பூசி போடுவதை 100 சதவீதம் உறுதிபடுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.