சருமத்தை பளபளப்பாக மாற்ற ஒயின் பேஷியல் செய்யுங்க!
நமது சருமத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் மாற்றுவதற்கு ஒயின் பயன்படுத்தி ஃபேஷியல் எவ்வாறு செய்வது என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
ஒயின் என்பது மதுபான வகையை சேர்ந்தது ஆகும். இந்த ஒயினை குடித்து வந்தால் வெள்ளையாக விடுவோம் என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் அது அப்படி இல்ல. ஒயின் நமது ரத்தத்தை சுத்தப்படுத்தி பளபளப்பாக மாற்றும். இதன்
மூலமாக சருமம் பளபளப்பாக மாறும்.
ஒயின் குடிப்பதால் நாம் நமது உடலின் எடையை குறைக்கலாம். அது போல ஒயினை எவ்வாறு ஃபேஷியல் செய்வதற்கு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒயின் ஃபேஷியல் செய்யும் முறை…
இதற்கு முதலில் கருப்புத் திராட்சையை அரைத்து முகத்தில் தேய்க்க வேண்டும். இந்த கருப்புத் திராட்சை ஸ்கிரப்பர் போன்ற செயல்படுகின்றது. அதனால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி முகம் பளபளப்பாக மாறத் தொடங்கும். மேலும் முகத்தில் அடைக்கப்பட்ட துளைகள் மீண்டும் திறக்கப்படும். இவ்வாறு கருப்புத் திராட்சை அரைத்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழிந்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
இதன் பின்னர் முகத்தில் ஒயின் கலந்த கிரீம் அல்லது ஒயின் கலந்த ஜெல்லை தடவ வேண்டும். பின்னர் இறுதியாக ஒயின் கலந்த சீரமை முகத்தில் தடவினால் முகம் பொலிவாகவும், பளபளப்பாகவும் மாறும். முகத்திற்கு இளமையான தோற்றம் கிடைக்கும்.
சருமத்தின் வகைகளை பொறுத்து ஒயின் பயன்பாடு…
* வறண்ட சருமம் கொண்டவர்கள் வந்து சருமத்திற்கு இனிப்பு ஒயின் பயன்படுத்த வேண்டும். வெள்ளை ஒயின் சருமத்திற்கு ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது.
* உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள் சருமத்திற்கு சிவப்பு ஒயின் பயன்படுத்தலாம். இந்த சிவப்பு ஒயின் தோலின் துளைகளுக்குள் சென்று முகப்பரு மற்றும் வெனல் கட்டிகளைத் நடக்கின்றது.
* சாதாரண சருமம் கொண்டவர்கள் அனைவரும் சருமத்திற்கு டிரைவ் ஒயின் பயன்படுத்தலாம். இந்த டிரைவ் ஒயினில் உள்ள மாலிக் அமிலம் முகத்தில் உள்ள துளைகளுக்குள் சென்று எண்ணெய்களை நீக்குகின்றது.