நுரையீரலில் உள்ள நாள்பட்ட சளியை வெளியேற்றி நுரையீரலை பாதுகாக்கும் வலிமையையும் தரும் இயற்கையான அற்புதமான முறையை பார்க்கப் போகிறோம். இந்த முறையை தொடர்ந்து நீங்கள் குடித்து வரும் பொழுது நாள்பட்ட சளி, இருமல், மூச்சு வாங்குதல் ஆகியவை குணமாகும்.
தேவையான பொருட்கள்:
1. திப்பிலி பொடி ஒரு ஸ்பூன்
2. மிளகு 15
3. இஞ்சி ஒரு துண்டு
4. வெற்றிலை இரண்டு
5. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்.
6. துளசி இலைகள் ஒரு கைப்பிடி.
செய்முறை:
1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் திப்பிலி பொடியை ஒரு ஸ்பூன் சேர்த்து கொள்ளவும்.திப்பிலி பொடி இல்லையென்றால் திப்பிலி வீட்டில் இருந்தால் இரண்டு திப்பிலியை இடித்துப் சேர்த்துக் கொள்ளலாம்.
2. பின் சின்ன உரலை எடுத்து அதில் மிளகு மற்றும் இஞ்சியை போட்டு நன்றாக இடித்து கொள்ளவும்.
3. இந்த கலவையை திப்பிலிப் பொடியுடன் சேர்த்து கொள்ளவும்.
4. பிறகு ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை போட்டு கொள்ளவும்.
5. கடைகளில் கருப்பு வெற்றிலை என கேட்டு வாங்கி கொள்ளுங்கள். பாத்திரத்தில் வெற்றிலையை கிழித்துப் போட்டு கொள்ளவும்.
6. பாத்திரத்தில் 300 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் எரியவிடவும்.
7. கால் டீஸ்பூன் அளவு மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளவும்.
8. பத்து நிமிடம் வரை நன்றாகக் கொதிக்க வேண்டும்.
9. நன்றாக கொதித்து வந்த பின் ஒரு கண்ணாடி டம்ளரில் வடிகட்டி கொள்ளவும்.
10. சுவைக்காக பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
பயன்படுத்தும் முறை:
1. குழந்தைகளாக இருந்தால் 5ml வரை குடிக்கலாம்.
2. 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் ’10ml வரை குடிக்கலாம்.
3. இளையவர்கள் மற்றும் முதியவர்கள் 25ml வரை குடிக்கலாம்.
இதை வெறும் வயிற்றில் தான் குடிக்க வேண்டும் என்பதில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் குடிக்கலாம். மிளகு அதிகமாக சேர்த்து இருப்பதனால் இந்த தண்ணீர் அதிகமாக காரமாக இருக்கும்.
சளி, இருமல் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம். எதுவும் இல்லாதவர்கள் சளியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் வாரம் மூன்று முறை இதனை எடுத்துக் கொள்ளலாம்.