பல்லி மற்றும் கரப்பான் பூச்சியை வீட்டை விட்டுத் துரத்த!
வீட்டில் பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகள் இருந்தால் உடல்நல குறைவு ஏற்படும். அதேபோல் பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகளுக்கு பெண்கள் அதிகமாக பயப்படுவார்கள். அதனால் மிகவும் எளிமையான முறையில் இதனை விரட்ட நல்ல தீர்வை இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
1. Boric acid
2. சர்க்கரை ஒரு ஸ்பூன்
3. மைதா ஒரு ஸ்பூன்.
செய்முறை:
1. முதலில் ஒரு bowl எடுத்துக் கொண்டு அதில் Boric Acid( கடைகளில் கிடைக்கும் ஒரு பாக்கெட் 10 ரூபாய் மட்டுமே) போட்டுக் கொள்ளவும்.
2. அதில் ஒரு ஸ்பூன் அளவு சர்க்கரை போட்டுக் கொள்ளவும்.
3. ஒரு ஸ்பூன் அளவிற்கு மைதாவை போட்டு கலந்து கொள்ளவும்.
4. நன்கு மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
5. சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
எங்கு பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகள் அதிகமாக இருக்கிறதோ அங்கு இதை ஒட்டி வைத்துக் கொள்ளவும்.
இது மிகவும் விஷத்தன்மை உள்ளதால் குழந்தைகளுக்கு எட்டாத வகையில் இதை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கு எட்டாமல் மிக உயரத்தில் ஜாக்கிரதையாக கையாளுங்கள்.
வீட்டில் சமையல் பகுதியில் அதிகமாக கரப்பான்பூச்சிகள் வருவதால் அங்கு இதை ஒட்டிவிடலாம். இதை கரப்பான் பூச்சிகள் உண்ணும் பொழுது உடனடியாக இறந்து விடும்.
மேலும் Naphthalene Ball என்று சொல்லக்கூடிய பூச்சி உருண்டை அனைவருக்கும் தெரியும். இந்த பூச்சி உருண்டையின் வாசனை பல்லிகளுக்கு பிடிக்காது. அதனால் பூச்சி உருண்டைகளை ஒரு துணியில் கட்டி பல்லிகள் எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு கட்டிவிட்டால் பல்லிகள் வராது.