செப்டம்பர் 21-ம் தேதியிலிருந்து பள்ளிகள் திறப்பு:! மாணவர்களுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள்!

0
65

 

செப்டம்பர் 21-ம் தேதியிலிருந்து பள்ளிகள் திறப்பு:! மாணவர்களுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள்!

கொரொனா அச்சுறுத்தல் காரணமாக,கடந்த 5 மாதங்களாக அனைத்து கல்வி நிறுவனங்களும் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகளால் ஒவ்வொரு
ஊரடங்கிலும் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக,செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை நான்காம் கட்டமாக ஊரடங்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் மத்திய மாநில அரசுகள்,பொது போக்குவரத்து இயக்கம், வழிபாட்டு தளங்கள் திறப்பு,மால்கள் திறப்பு, சுற்றுலா தளங்கள் திறப்பு, போன்ற பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது.

இந்நிலையில் பள்ளிகள் வருகின்ற செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.மேலும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டுமே,பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமின்றி மத்திய அரசின் இந்த அறிவிப்பானது கட்டாயப்படுத்துவதாக இல்லை.அந்தந்த மாநிலங்களின் நோய் பரவலுக்கு ஏற்ப மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் இருந்து அனுமதியை எழுத்துப்பூர்வமாக பெற்று வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வரும் நிலையில் அவர்களுக்கான சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளை பள்ளிகள் கட்டாயம் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது மட்டுமன்றி தற்போது வரை 50 சதவீத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத 50 சதவீத பள்ளி ஊழியர்கள் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள் பின்பற்ற வேண்டிய மத்திய அரசின் சில கட்டுப்பாட்டு வழிமுறைகள்!

மாணவர்களுக்கு இடையே குறைந்தபட்சம் ஆறு அடி தூரத்தை பின்பற்ற வேண்டும்.

வகுப்புகளிலும் முக கவசம் அல்லது ஃபேஸ் கவர் மாணவர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

ஆல்கஹால் அடிப்படையிலான கைகழுவும் திரவங்களைக் கொண்டு குறைந்தது 20 நொடிகள் கைகழுவ வேண்டும்.அல்லது சாதாரணமாக 40 டோ 60 நொடிகள் அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும்.

மாணவர்கள் இருமும் போதும் தும்மும் போதும் வாயையும் மூக்கையும் கைக்குட்டையால் மூடிக் கொள்வது,இதற்காக பயன்படுத்திய கைகுட்டையை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது போன்ற விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும்.

மாணவர்கள் பள்ளி வளாகங்களில் எச்சில் துப்புவது கண்டிப்பாக தடுக்க வேண்டும்.

அனைவரும் சுயமாக தங்களது ஆரோக்கியத்தை கண்காணித்தல் வேண்டும். ஏதாவது நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

 

 

author avatar
Pavithra