பணக் கஷ்டம் நீங்கி பண வரவு அதிகரிக்க.. எளிய பரிகாரம்..!!

Photo of author

By Divya

பணக் கஷ்டம் நீங்கி பண வரவு அதிகரிக்க.. எளிய பரிகாரம்..!!

இந்த உலகில் பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. நாம் வாழ வேண்டும் என்றால் கையில் பணம் இருக்க வேண்டும். இந்த பணத்தின் வரை அதிகரிக்க ஆன்மீக வழிகளை பின்பற்றுவது சிறந்த ஒன்றாக இருக்கும்.

ஒரு ரூபாய் நாணயம் 7 எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது ஐந்து ரூபாய் நாணயம் 7 எடுத்துக் கொள்ளுங்கள். அதை சிறிது பன்னீரில் கழுவி துடைத்து வைத்துக் கொள்ளவும்.

வெள்ளிக்கிழமை காலை ஒரு தட்டில் மஞ்சள் குங்குமம் வைத்து இந்த நாணயங்களை அதில் வைத்து ஒவ்வொரு நாணயத்தின் மீதும் ஒவ்வொரு துளி எலுமிச்சை சாறு விட்டு அதற்கு பூ வைத்து தூப தீபம் காட்டி வழிபாடு செய்யவும்.

“ஓம் ஸ்ரீம் மகாலட்சுமியை நமஹ? என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபாடு செய்யவும். பின்பு, அந்த ஏழு நாணயங்களை எடுத்து வீட்டில் உள்ள எதாவது ஏழு இடங்களில் வைத்து விடவும். யாருக்கு தெரியாதவாறு யார் கைக்கும் எட்டாதவாறு வைத்து விடவும்.

வீட்டின் நான்கு மூலைகளிலும் மற்றும் வேறு மூன்று இடங்களில் அதாவது பரண், கப் போர்ட் போன்று 7 இடங்களில் வைத்து விடவும். அதை எப்பொழுதும் மாற்ற வேண்டாம்.

இதை செய்த 48 நாட்களுக்குள் நிச்சயம் பண வரவில் முன்னேற்றம் இருக்கும். இவ்வளவு சாதாரண பரிகாரம் என்று நினைக்காமல் மனதார வேண்டிக்கொண்டு செய்து வைக்கவும்.