பார்வை குறைபாடு நீங்க! மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற காய்கறிகள் போதும்!

0
275
#image_title

பார்வை குறைபாடு நீங்க! மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற காய்கறிகள் போதும்!

தற்போதுள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்று அதிக அளவு கணினி மற்றும் தொலைபேசியை உபயோகப்படுத்துவது. நம் உடலில் ரத்தத்தின் சர்க்கரை அளவு,ரத்த கொதிப்பு மற்றும் மரபு சார்ந்த பிரச்சனைகளாலும் பார்வை குறைபாடு உண்டாகிறது.

மற்றொரு முக்கியமான காரணங்களில் ஒன்று நம் அன்றாட வாழ்வில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவு பழக்க வழக்கங்களும் இதற்கு மிக முக்கிய காரணமாகும். நாம்

சாப்பிடக்கூடிய உணவுகளில் கண்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை.

கண்ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ சத்து மிகவும் முக்கியமான ஒன்றாகும். வைட்டமின் சி,இ பீட்டா கரோட்டின் என சொல்லக்கூடிய நல்ல கொழுப்பு அமிலங்களும் பார்வைத் திறனுக்கு அதிக அளவில் தேவைப்படுகிறது.

சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பிரச்சினைகள் வருவதை தடுப்பது மட்டுமல்லாமல் நம் கண் பார்வை திறனும் எளிதாக அதிகரிக்கிறது.

நாம் தினமும் சாப்பிடக்கூடிய உணவில் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் உள்ள அனைத்து வகையான காய்களும் கண் பார்வைத் திறனுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

குறிப்பாக கேரட், மஞ்சள் பூசணி, குடைமிளகாய், போன்றவைகளில் வைட்டமின் ஏ, சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இந்த மூன்று காய்கறிகளை மட்டும் உட்கொண்டால் போதுமானது இதில் அதிக அளவில் கண் பார்வை திறனுக்கு ஏற்ற சத்துக்கள் கிடைக்கிறது.

Previous articleதனுஷ் தான் பெஸ்ட்!  வாத்தி படத்திற்கு வெளியான முதல் விமர்சனம்! 
Next articleகொழுப்பு கட்டி குணமாக வேண்டுமா? இந்த பேஸ்டை கொன்டு மசாஜ் செய்யுங்கள்!