உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றுவது இனி சுலபமே!! முழுமையான தீர்வு உண்டு!
ஆண்களுக்கு மீசை,தாடி இருந்தால் தான் அழகு.ஆனால் பெண்களுக்கு அவை இருப்பது அவர்களின் அழகை பாதிக்கும்.மூக்கிற்கு கீழ்,காதுப் பகுதி மற்றும் தாடையில் காணப்படும் பூனை முடியால் பெண்கள் கேலி கிண்டலுக்கு ஆளாகி வருகின்றனர்.
ஹார்மோன் பிரச்சனையால் இந்த தேவையற்ற முடிகள் வளருகிறது.இதை அகற்ற பல முயற்சி செய்தும் அதில் தோல்வியை கண்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்பை பின்பற்றி வரவும்.
தீர்வு 01:-
1)சர்க்கரை
2)எலுமிச்சை சாறு
ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறில் 1/2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலக்கி முகத்தில் பூனை முடி உள்ள இடத்தில் பூசி 1/2 மணி நேரம் கழித்து முகத்தை கழுவி வந்தால் பூனை முடி கொட்டி விடும்.
தீர்வு 02:-
1)மஞ்சள் தூள்
2)உப்பு
அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கால் ஸ்பூன் தூள் உப்பை மிக்ஸ் செய்து சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்துக் கொள்ளவும்.இதை முகத்தில் உள்ள பூனை முடி மீது பூசி வந்தால் அவை விரைவில் கொட்டி விடும்.
தீர்வு 03:-
1)எலுமிச்சை சாறு
2)தேன்
ஒரு ஸ்பூன் எலுமிச்சம் பழ சாற்றில் கால் ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கி முகத்தில் தடவி வந்தால் அவை தேவையற்ற முடிகள் நீங்கி விடும்.
தீர்வு 04:-
1)தக்காளி
2)சர்க்கரை
3)மஞ்சள்
ஒரு தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி அதனுள் 1/2 ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1/4 ஸ்பூன் மஞ்சள் சேர்த்து முகம் முழுவதும் மசாஜ் செய்து கழுவி வந்தால் தேவையற்ற முடிகள் அகலும்.