இந்த பொடியை சாதத்தில் போட்டு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் முடி உதிர்தல் மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்!!

0
128
if-you-put-this-powder-in-rice-and-eat-it-you-will-get-a-permanent-solution-to-diabetes-hair-loss-joint-pain
if-you-put-this-powder-in-rice-and-eat-it-you-will-get-a-permanent-solution-to-diabetes-hair-loss-joint-pain

இந்த பொடியை சாதத்தில் போட்டு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் முடி உதிர்தல் மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்!!

மோசமான வாழ்க்கை முறை,ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்க வழக்கத்தால் உடலில் மோசமான நோய்கள் உருவாகிறது.

உடலை உருக்கி எடுக்கும் சர்க்கரை நோய்,கடுமையான தொந்தரவுகளை கொடுக்கும் மூட்டு வலி முழுமையாக குணமாக கறிவேப்பிலை பொடி செய்து சாப்பிட்டு வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)உடைத்த உளுந்து – 1/4 கப்
2)வர மிளகாய் – 4
3)கருப்பு எள் – 1/2 ஸ்பூன்
4)கறிவேப்பிலை – 1 கப்
5)நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
6)உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/2 ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து எடுக்கவும்.இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

பிறகு அதே வாணலியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.அதில் உடைத்த உளுந்து சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

அதன் பின்னர் வர மிளகாய் மற்றும் கருவேப்பிலையை போட்டு வறுத்து எடுக்கவும்.இதை அனைத்தையும் நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் சிட்டிகை அளவு பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

இந்த கறிவேப்பிலை பொடியை சூடான சாதத்தில் போட்டு சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

முடி உதிர்தல்,மூட்டு வலி ஆகியவை சில தினங்களில் சரியாகும்.கறிவேப்பிலையில் அதிகளவு கால்சியம்,பொட்டாசியம்,வைட்டமின்கள் நிறைந்து இருக்கிறது.அதேபோல் உளுந்து மற்றும் எள்ளில் கால்சியம் சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.இவை உடல் எலும்பை வலுவாக்க உதவுகிறது.