புதிய திருமண தம்பதிகளுக்கு காத்திருக்கும் திருப்பதி ஏழுமலையானின் பரிசு!!

Photo of author

By Rupa

புதிய திருமண தம்பதிகளுக்கு காத்திருக்கும் திருப்பதி ஏழுமலையானின் பரிசு!!

திருப்பதி போனால் திருப்பம் வரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று, நம் நாட்டில் பணக்கார கடவுள் என்றால் அது திருப்பதி பெருமாள் தான், நாட்டில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை ஒவ்வொருவர் வீட்டிலும் நிச்சயம் பெருமாள் படத்தை வைத்து பூஜிப்பது வழக்கம். கொரோனா காலகட்டத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதித்த கோவில் நிர்வாகம், தற்போது இந்த விதி முறைகளில் சில மாற்றங்களை மட்டும் கடைபிடித்து வருகிறது.

நாட்டில் ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும் உங்கள் வீட்டு திருமணத்தை திருப்பதி ஏழுமலையான் அருளாசியோடு சன்னிதானத்தில் நடத்த வேண்டும் என்று விரும்புவதை நிறைவேற்றும் விதமாக ,தேவஸ்தானத்தின் சார்பில் தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது.

திருமணம் நடைபெற இருக்கும் புதுமண தம்பதியர், திருமணம் நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தங்களது திருமண பத்திரிக்கை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் குறிபிட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைத்தால், ஏழுமலையானின் அருள் பிரசாதம் லட்டு, மஞ்சள், குங்குமம், தம்பதிகள் தங்கள் கைகளில் கட்டிக் கொள்ள கங்கணம், உள்ளிட்ட பிரசாத பொருட்கள் பக்தர்கள் குறுப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வசதி வாய்ப்பு காரணமாக திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் குறையை போக்கும் விதத்தில் உள்ள இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்தி கொண்டு, திருப்பதி ஏழுமலையான் அருளாசியோடு தங்கள் திருமணத்தை நடத்தி கொள்ளுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இனி தங்கள் வீட்டு திருமணத்தை உலகில் எங்கிருந்தாலும் ஏழுமலையான் ஆசிர்வாதத்தோடு இருக்கும் இடத்திலேயே நடத்தி கொள்ளலாம்.