வாயு தொல்லை உடனே குணமாக வேண்டுமா? இரண்டு கொத்து கருவேப்பிலை!

வாயு தொல்லை உடனே குணமாக வேண்டுமா? இரண்டு கொத்து கருவேப்பிலை!

வாயு தொல்லை, செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் நீங்க வீட்டு வைத்தியம்.தற்போது உள்ள காலகட்டத்தில் பலருக்கும் இந்த வாயு தொல்லை, செரிமானம் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் அதிகமாக இருக்கின்றது. இது உணவில் அதிகம் காரம் சேர்த்துக் கொள்வதனாலும் அடிக்கடி மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பொழுது அந்த மாத்திரையின் பக்க விளைவுகளின் காரணமாகவும் இந்த வாயு தொல்லை உண்டாகக்கூடும். இதனை எவ்வாறு சரி செய்வது என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். இந்த வாயு தொல்லை ஏற்பட காரணம் கிழங்கு வகைகளை அதிகமாக உட்கொள்வது மேலும் மலச்சிக்கல் மற்றும் குடல்களில் புழுக்கள் இருப்பது போன்ற காரணங்களால் உருவாகிறது. இந்த செரிமான பிரச்சனை இருந்தால் அடிக்கடி குமட்டல், வாந்தி ,வயிறு உப்புசம், வயிறு எரிச்சல், வாயில் அதிகமாக உமிழ்நீர் சுரப்பது, வாய் துர்நாற்றம், மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

அதனை சரி செய்ய முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் 1/2 ஸ்பூன் சீரகம் ஒரு சிறிய துண்டு இஞ்சி தோல் நீக்கி விட்டு சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு கொத்து கருவேப்பிலையை அதில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். இதில் சேர்த்துள்ள மூன்று பொருட்களும் வாயு தொல்லைக்கும் செரிமான பிரச்சனைக்கும் மிகுந்த ஆற்றல் தன்மை கொண்டது.

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 200மிலி தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு நாம் அரைத்து வைத்திருந்த விழுதை அதில் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். பிறகு அதனை எடுத்து வடிகட்டி ஒரு டம்ளரில் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த வாயு தொல்லை, அஜீரணம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இதனை காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். பிறகு இரவு தூங்கப் போகும் முன் குடிக்க வேண்டும். இவ்வாறு வாயு ,அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது இவ்வாறு செய்து கொடுத்தால் முற்றிலும் குணமாகும்.