செரிமானத்தை தூண்டும் “இஞ்சி + பூண்டு”! இதை இப்படி பயன்படுத்தினால் 100% பலன் கிடைக்கும்!!
இன்று உள்ள உணவுகளில் ருசி இருக்கின்றதே தவிர உடலுக்கு தேவையான சத்துக்கள் இருப்பதில்லை.அது மட்டும் இன்றி எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளாக இருப்பதினால் மலச்சிக்கல்,செரிமான மண்டல பிரச்சனை,குடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது.
எனவே எளிதில் செரிமானம் ஆகாத உணவை உட்கொண்டாலும் இந்த மூலிகை நீரை ஒரு கிளாஸ் குடித்தால் சில நிமிடங்களில் செரிமானப் பிரச்சனை தீரும்.
தேவையான பொருட்கள்:-
1)இஞ்சி – 1 துண்டு
2)பூண்டு – 1 பல்
3)சீரகம் – 1/4 ஸ்பூன்
4)கறிவேப்பிலை – 1 கொத்து
5)தேன் – 1 ஸ்பூன்
செய்முறை:-
செரிமானத்தை தூண்டக் கூடிய மூலிகை பானம் தாயாரிக்க முதலில் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பல் பூண்டை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
பிறகு அதில் இடித்த இஞ்சி,பூண்டு போட்டு கொதிக்க விடவும்.பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலை,1/4 ஸ்பூன் சீரகம் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
பிறகு அடுப்பை அணைத்து இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து குடித்தால் செரிமானப் பிரச்சனை நீங்கி செரிமான மண்டலம் ஆரோக்கியம் பெறும்.