சிறுமி கருக்கலைப்பு விவகாரம்!! லஞ்சம் பெற்ற விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்!!

0
100
Girl Abortion Issue!! Inspector sacked in bribery case!!
Girl Abortion Issue!! Inspector sacked in bribery case!!

சிறுமி கருக்கலைப்பு விவகாரம்!! லஞ்சம் பெற்ற விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்!!

கருக்கலைப்பு தொடர்பான புகார் எழுந்ததால் டாக்டர்களிடம் ரூ 12 லட்சம் லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான விவரம் பின்வருமாறு,

செங்கல்பட்டு மாவட்டம் அருகே உள்ள  காட்டாங்கொளத்தூரில் உள்ள  ஒரு சிறுமியை கடந்த ஜூன் 30 ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரது தந்தை மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது காணாமல் போன 17 வயது சிறுமியை சென்னை  மீனம்பாக்கம் திரிசூலம் பகுதியை  சேர்ந்த ரஞ்சித் வயது 27 என்பவர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. பின்னர் ரஞ்சித்தை தேடிப் பிடித்த போலீசார் அவரிடம் இருந்த சிறுமியை மீட்டனர்.

சிறுமியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இப்போது ரஞ்சித் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அந்த சிறுமியின் தந்தை வண்டலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரஞ்சித் மீது பாலியல் புகார் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகிதா அன்ன கிருஷ்டி போக்சோ சட்டத்தின் கீழ் ரஞ்சித்தை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். 

இதையடுத்து  பாதிக்கப்பட்ட சிறுமிக்கு போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்தபோது அவருக்கு ஏற்கனவே கருக்கலைப்பு செய்த  சம்பவம் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியான வண்டலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மகிதா சிறுமியின் தாயாரை அழைத்து விசாரணை நடத்தினார்.

அதில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பெண் மருத்துவர் ஒருவர் சிங்கப்பெருமாள் கோவில் மருத்துவமனை மற்றும் மறைமலைநகரில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறினார்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கூறிய மருத்துவமனைக்குச் சென்று அரசு மருத்துவர் மற்றும் தனியார் மருத்துவமனை பெண் மருத்துவரிடம் விசாரணை நடத்திய போது  கருக்கலைப்பு  செய்தது தெரியவந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் மற்றும் அவருடன் சென்ற வக்கீல் இருவரும் பெண் டாக்டர்களிடம் 17 வயதுக்கு உட்பட்ட சிறுமிக்கு கருக்கலைப்பு செய்வது சட்டப்படி குற்றமாகும். எனவே உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்திய மருத்துவ கவுன்சிலருக்கு தகவல் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் பயந்து போன2  மருத்துவர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் அரசு மருத்துவர் ரூ.10 லட்சமும் தனியார் மருத்துவர் ரூ. 2 லட்சமும் தருவதற்கு ஒப்புக்கொண்டு பணத்தையும் இன்ஸ்பெக்டரிடம் கொடுத்துள்ளனர்.  இதற்கிடையே தங்களை மிரட்டி இன்ஸ்பெக்டர் மகிதா ரூ.12 லட்சம் பெற்றதாக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் 2 பெண் டாக்டர்களும் புகார் செய்தனர்.

புகாரின் அடிப்படையில்  தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் உரிய விசாரணை நடத்தி  வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகிதா அன்ன கிருஷ்டியை பணியிடைநீக்கம் செய்து நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் கடந்த 3-ஆம் தேதி தான் வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தாம்பரம் மாநகர போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சென்னையை ஒட்டியுள்ள மறைமலைநகர் சிங்கப்பெருமாள் உள்பட பகுதிகளில் சில தனியார் மருத்துவமனைகள் சிறுமிக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யும் சம்பவம் பல காலம் நடைபெறுவதால் அந்த மருத்துவமனை மற்றும் டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.

 

 

Previous articleபாமக நிர்வாகிகள் கொலை வழக்கு!! அன்புமணி ராமதாஸ் கண்டன ஆர்பாட்டம்!!
Next articleரசிகர்கள் எதிர்பார்த்த வேட்டையாடு விளையாடு பாகம் 2!! படத்தின் பணிகள் தொடக்கம்!!