காதலியை வீடு புகுந்து கொளுத்திய கள்ளகாதலன்!!  நடுங்க வைக்கும் கொடூர கொலை சம்பவம்!!

Photo of author

By Vijay

KERALA: காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற காதலன்.

கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் அருகே உள்ள போதுவாள் கிராமத்தில் வசித்து வருபவர் சஜிமோல் இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது இவருக்கு கணவர் குழந்தைகளும் உள்ளனர். ஆனால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சஜிமோல் கணவனை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

அவருக்கும் பலா பகுதியை சேர்ந்த சிபு என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அதன் பின் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிபு விசா முறைகேடு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சஜிமோல் க்கு தெரியவந்துள்ளது அதன் பின் சிபு வை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இதை அறிந்த சிபு நேற்று இரவு சஜிமோல் வீட்டிற்கு சந்திக்கச் சென்றுள்ளார். வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார் இதனிடையே வாக்குவாதம் ஆரம்பித்தது. தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த நிலையில் வாக்குவாதம் முற்றிய நிலையில் சிபு தன்னிடம் இருந்த பெட்ரோலை ஊற்றி எரித்து விட்டு தானும் மேலே ஊற்றி கொண்டுள்ளார்.

சிபு சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார் இதனை அறிந்து அங்கு வந்த போலீஸ் சஜிமோலை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் பலனின்றி அவரும் உயிரிழந்தார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த கேரளாவையே உலுக்கியுள்ளது.