பெண்களே காதலன் தனியாக அழைத்தால் செல்லாதீர்கள்! இல்லையென்றால் உங்களுக்கும் இந்த நிலை தான்!
இந்த காலகட்டத்தில் பலர் கொலை கொள்ளை கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. பெண்கள் தேர்ந்தெடுக்கும் தனது வாழ்க்கை துணையே இவர்களின் பெரிய எதிரிகளாக நாளடைவில் மாறிவிடுகின்றனர்.அந்த வகையில் தற்பொழுது ஒரு சம்பவம் சென்னை அருகே அரங்கேறியுள்ளது. சென்னையை சேர்ந்த 22 வயதான பெண்மணி ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார்.23 வயதான லோகேஷ் என்பவரும் அந்தப் பெண்மணியும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். லோகேஷ் என்பவர் சென்னை துரைப்பாக்கம் எழில் நகரில் வசித்து வருகிறார்.முதலில் தித்திப்பாக இருக்கும் காதல் நாளடைவில் இருவருக்கும் கசக்க ஆரம்பித்து விட்டது.
அந்த வகையில் லோகேஷ் நடவடிக்கை நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. அந்தப் பெண்மணி லொகேஷை தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார். லோகேஷ் ,அந்த பெண்மணி கூறும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.இவ்வாறு நடந்து கொண்டே இருந்தால் இந்த உறவு நிலைக்காது என்று கூறி அவரிடம் பேசுவதை அந்தப் பெண்மணி நிறுத்திவிட்டார்.அந்த பெண்மணி பேசுவது இல்லை என்று லோகேஷ் அதிகமாக கோபம் அடைந்துள்ளார். அதனையடுத்து லோகேஷ் அந்தப் பெண்மணி வரவழைக்க திட்டம் தீட்டியுள்ளார்.நான் உன்னிடம் பேச வேண்டும் என்று லோகேஷ் அந்தப் பெண்மணியிடம் ஆசை வார்த்தைகளை கூறி தனியாக அழைத்துள்ளார்.அந்தப் பெண்மணிகளும் ஆசை வார்த்தைகளை நம்பி ராஜா அண்ணாமலைபுரம் வல்லீஸ்வரர் தோட்டத்திற்கு லோகேஷை பார்க்க சென்றார்.
இருவரும் அங்கு சந்தித்துக் கொண்டனர்.முதலில் சுமுகமாக ஆரம்பித்த பேச்சுவார்த்தை ,நேரம் கடக்க கடக்க லோகேஷ் அந்தப் பெண்மணியை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.மேலும் அந்தப் பெண்மணியை பொது இடத்திலேயே வைத்து அடித்துள்ளார். இதுகுறித்து அப்பெண்மணி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.அங்குள்ள போலீசார் ,விசாரணை மேற்கொண்டு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
மேலும் போலீசார் லோகேஷை நீதிமன்றத்தில் ஒப்படைத்து அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தனர்.தற்போது லோகேஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.பெண்களே நீங்கள் தவறான துணையை தேர்ந்தெடுக்கும் நிலையில் உங்களுக்கு இது போல விபரீதமான செயல்கள் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.அதேபோல காதலனாக இருந்தாலும் கூட தனியாக அழைக்கும் பொழுது அவர்களை சந்திப்பதை முற்றிலும் தவிர்க்க முயல வேண்டும்.