குளு குளு ‘குலுக்கி சர்பத்’.. கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

0
174
#image_title

குளு குளு ‘குலுக்கி சர்பத்’.. கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் குலுக்கி சர்பத்.. கேரளாவில் செய்யப்படும் குளிர்ந்த பானம் ஆகும். சப்ஜா, பச்சை மிளகாய், இஞ்சி, எலுமிச்சை சேர்த்து தயாரிக்கும் இந்த பானம் உடல் சோர்வை போக்கக் கூடியது.

தேவையான பொருட்கள்

சப்ஜா விதைகள் – 1 ஸ்பூன்
ஐஸ் கட்டி – 1 கப்
குளிர்ந்த நீர் – 2 கப்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று
நறுக்கிய இஞ்சி – 1/4 ஸ்பூன்
சர்க்கரை பாகு – 1/4 கப்

குலுக்கி சர்பத் சுவையாக செய்யும் முறை…

ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் சப்ஜா விதை சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற விடவும். 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊற விட்டால் போதுமானது.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1/4 கப் சர்க்கரை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பாகு பதத்திற்கு கொதிக்க விட்டு எடுத்துக் கொள்ளவும்.

ஒரு ஷேக்கரில் தயார் செய்து வைத்துள்ள சர்க்கரை பாகு, எலுமிச்சை சாறு, சப்ஜா விதைகள் சேர்க்கவும்.

அடுத்து 1 பச்சை மிளகாயை கீறி சேர்க்கவும். இவை அனைத்தையும் சேர்த்த பின்னர் 3 முதல் 3 எலுமிச்சை துண்டுகள், நறுக்கிய இஞ்சி 1/4 ஸ்பூன் அளவு மற்றும் ஐஸ் கட்டிகள் தேவையான அளவு சேர்க்கவும்.

அடுத்து குளிர்ந்த நீர் சேர்த்து கலந்து ஒரு கிளாஸிற்கு ஊற்றி பருகவும்.