மருத்துவ குணங்கள் நிறைந்த குளுகுளு இளநீர் ஹல்வா! இந்த முறையில் செய்து அசத்துங்கள்!!

Photo of author

By Divya

மருத்துவ குணங்கள் நிறைந்த குளுகுளு இளநீர் ஹல்வா! இந்த முறையில் செய்து அசத்துங்கள்!!

கோடை காலங்களில் உடல் சூட்டை தணிப்பதில் இளநீர் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த இளநீரில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுவதால் அவற்றை பருகும் பொழுது மலச்சிக்கல்,செரிமான கோளாறு,வாய்ப்புண்,வயிற்றுப்புண் உள்ளிட்ட பாதிப்புகள் நீங்கும்.இளநீர் குளுகுளு தன்மை கொண்ட பானம் என்பதால் சிறுநீர் எரிச்சல்,அல்சர் உள்ளிட்ட பாதிப்புகளை குணப்படுத்தும்.இதில் அதிகளவு பாஸ்பரஸ்,சோடியம்,பொட்டாசியம்,கால்சியம், மெக்னீசியம் இருப்பதினால் இவை உடலுக்கு நீர்ச்சத்தை அள்ளித்தரும் பானமாக இருக்கிறது.இவை மஞ்சள் காமாலை,அம்மை நோய்,தோல் தொடர்பான நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.இத்தனை சிறப்புக்கள் கொண்ட இந்த இளநீரில் சுவையான ,ஆரோக்கியமான ஹல்வா செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

*இளநீர் தண்ணீர் – 2 கப்

*சோள மாவு(கார்ன் ப்ளார் ) – 1 கப்

*இளநீர் வழுக்கை – தேவையான அளவு

*சர்க்கரை – 2 கப்

*நெய் – தேவையான அளவு

*முந்திரி – 10 முதல் 15 (பொடியாக நறுக்கியது)

*பாதாம் – 10 முதல் 15 (பொடியாக நறுக்கியது)

*ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

1.முதலில் பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் இளநீர் தண்ணீர் மற்றும் சோள மாவு சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து கொள்ள வேண்டும்.

2.அடுப்பில் வாணலி வைத்து அதில் சுத்தமான நெய் ஊற்றி அவை சூடேறியதும் முந்திரி மற்றும் பாதாமை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.

3.பின்னர் அதே வாணலியில் தண்ணீர் 1 கப் சேர்த்து வறுத்து வைத்துள்ள பாதாம் மற்றும் முந்திரி பருப்பை அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.

4.பிறகு கலந்து வைத்துள்ள இளநீர் தண்ணீர் மற்றும் சோளமாவு கலவையை அதி சேர்த்து கை விடாமல் கிண்டவும்.

5.அவை கெட்டியான நிலைக்கு வந்தவனுடன் அதில் தேவையான அளவு நெய் ஊற்றி ஹல்வா பதம் வரும் வரை கிண்டவும்.

6.பிறகு அதில் வாசனை மிகுந்த ஏலக்காய் தூள் மற்றும் இளநீர் வழுக்கை சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வரை வதக்கி அடுப்பை அணைக்கவும்.