Breaking: சிறப்பு பேருந்துகள் எந்தெந்த இடத்திலிருந்து இயங்கும்? முழு விவரம்!

Photo of author

By Amutha

Breaking: சிறப்பு பேருந்துகள் எந்தெந்த இடத்திலிருந்து இயங்கும்? முழு விவரம்!

Amutha

Breaking: சிறப்பு பேருந்துகள் எந்தெந்த இடத்திலிருந்து இயங்கும்? முழு விவரம்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று முதல் 14 ஆம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

வழக்கமாகச் செல்லும் 2100 பேருந்துகளுடன் கூடுதலாக 10 632 பேருந்துகள் என மொத்தம் 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதன்படி பொங்கல் திருநாளையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோயம்பேடு, மாதவரம், கேகே நகர், தாம்பரம் மெப்ஸ் மற்றும் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி ஆகிய ஆறு இடங்களில் இருந்து இன்று முதல் 14 ஆம் தேதி சனிக்கிழமை வரை  3 மூன்று நாட்களுக்குசிறப்பு பேருந்துகளின் இயக்கம் நடைபெறும்.

இந்த ஆறு பேருந்து நிலையங்களுக்கும் போக்குவரத்து நெரிசல் இன்றி செல்லும் வகையில் 340 இணைப்பு  மாநகர பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதன்படி

1. கோயம்பேடு பஸ் நிலையம்- 127 பேருந்துகள்

2. பூந்தமல்லி பஸ் நிலையம்- 57 பேருந்துகள்

3. தாம்பரம் பேருந்து நிலையம்- 115 பேருந்துகள்

4. மாதவரம் பேருந்து நிலையம்- 26 பேருந்துகள்

5. கேகே நகர் பேருந்து நிலையம்- 8 பேருந்துகள்

6. பாரிமுனை பேருந்து நிலையம்- 7 பேருந்துகள் என மொத்தம் 340 சிறப்பு மாநகர பேருந்துகள் போக்குவரத்து துறையால் இயக்கப்படுகிறது. சிறப்பு பஸ் களின் இயக்கம் தொடங்கப்பட்டு விட்டதால் பொதுமக்கள்  பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களின் சொந்த ஊரை நோக்கி திரண்டு கிளம்பி விட்டனர்.