வெளிநாட்டு இந்தியர்களுக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! நீங்களும் யுபிஐ மூலம் பணபரிவர்த்தனை செய்யலாம்!

0
147
Happy news issued by RBI for overseas Indians! You too can transact with UPI!
Happy news issued by RBI for overseas Indians! You too can transact with UPI!

வெளிநாட்டு இந்தியர்களுக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! நீங்களும் யுபிஐ மூலம் பணபரிவர்த்தனை செய்யலாம்!

தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் அவரவர்களின் தேவைகளை  வீட்டில் இருந்த படியே பூர்த்தி செய்து வருகின்றனர்.கடந்த ஆண்டுகளில் இருந்து அனைத்து பொருட்களையும் ஆன்லைன் மூலமாகவே பெற்றுகொள்ளும் வசதி வந்துவிட்டது,அதில் காய்கறிகள்,மளிகை பொருட்கள்,உணவு,ஆடைகள் என அனைத்தும் அடங்கும்.மேலும் இதுமட்டுமின்றி ஒருவருடைய வங்கி கணக்கில் இருந்து மற்றொருவரின் வங்கி கணிக்கில் பணம் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

அதற்கென பல்வேறு செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது.அதில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவது கூகுள் பே,போன்பே, பேடிஎம் தான்.இந்த யுபிஐ வசதியானது இந்தியாவில் முதன்முதலில் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி தொடங்கப்பட்டது.கடந்த நவம்பர் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ 12.11 லட்சம் கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.இந்த சேவையை பெற வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் NRI அல்லது NRO வில் வங்கி கணக்கை தொடங்க வேண்டும்.அந்த வங்கி கணக்குடன் தங்களுடைய சர்வதேச மொபைல் எண்ணை இணைக்க வேண்டும்.

இதனை நீங்கள் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.அதனை தொடர்ந்து பணப்பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படும்.முதலில் சிங்கப்பூர்,ஆஸ்திரேலியா,கனடா உள்ளிட்ட பத்து நாடுகளில் கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Parthipan K