இந்தியாவின் இந்த இருமல் மருந்தை பயன்படுத்தாதீர்! உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை! 

0
224

இந்தியாவின் இந்த இருமல் மருந்தை பயன்படுத்தாதீர்! உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை! 

இந்தியாவின் நொய்டாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு இருமல் மருந்துகளில் குறைபாடு இருப்பதால் அதனை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 குழந்தைகள் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள மேரியன் பயோடெக் நிறுவனத்தின் டோக்-1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதால் உயிரிழந்து விட்டதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியது. மேலும் மருந்தை சோதனைக்கு உட்படுத்தியதில் அதில் அதிகளவு எத்திலின் கிளைக்கால் இருப்பதாக அந்த நாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து உலக சுகாதார நிறுவனம் மேரியன் பயோடெக் நிறுவனத்தின் டோக் -1மேக்ஸ் மட்டும் அம்ப்ரோனால் ஆகிய 2 மருந்துகளையும் ஆய்வு குழு சோதனைக்கு உட்படுத்தியது.

சோதனையின் முடிவில் இரண்டு மருந்துகளிலும் அதிக அளவு எத்திலின் கிளைக்கால் என்ற ரசாயனம் இருப்பதால்  2 மருந்துகளும் குழந்தைகள் பயன்படுத்துவதற்கு உகந்தது அல்ல என்று அறிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர். அரியானா மாநிலம் சோனிபட் மெய்டன் நிறுவனத்தில் சர்ச்சைக்குரிய வகையில் தயாரிக்கப்பட்ட மாசடைந்த நான்கு இருமல் மருந்துகள் காரணமாக இருக்கலாம். என ஏற்கனவே உலக சுகாதாரஅமைப்பு எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

உஸ்பெகிஸ்தானில் மரியான் நிறுவனத்தின் இருமல் மருந்தை குடித்து 18 குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டது.

இந்திய மருந்துகளின் மீது எதிர்மறையான தாக்கங்களை உலக அளவில் இந்த சம்பவங்கள் பெரிதும் ஏற்படுத்தியுள்ளன.

 

Previous articleபொதுமக்களுக்கு முக்கிய செய்தி! இன்று முதல் இந்த இடங்களில் பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கம்!
Next articleBreaking: சிறப்பு பேருந்துகள் எந்தெந்த இடத்திலிருந்து இயங்கும்? முழு விவரம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here