பயணிகளுக்கான சிறப்பு அறிவிப்பு!! தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்!!

0
279
Happy news for SETC bus commuters!!
Happy news for SETC bus commuters!!

பயணிகளுக்கான சிறப்பு அறிவிப்பு!! தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பயணிகளுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. தற்போது கோடை விடுமுறை தொடங்கி விட்டதால், மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கோ,சுற்றுலாத்தலங்களுக்கோ  செல்வார்கள். இது போன்ற சமயத்தில் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதும். இதை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்யும்.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் 1200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்த பேருந்துகளில் வாரத்தில் மூன்று நாட்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டுமே பயணிகளின் கூட்டம் நிரம்புகிறது. மத்த நான்கு நாட்கள் பேருந்துகள் காலியாக செல்வதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இதன் இழப்பை ஈடு செய்யவும், தனியார் பேருந்து பயணிகளை ஈர்க்கவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பயணிகளுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படி நீங்கள் அடிக்கடி பேருந்தில் பயணம் மேற்கொள்பவராக இருந்தால் இந்த சலுகை உங்களுக்கு பொருந்தும். அது என்னவென்றால் அரசு விரைவு பேருந்துகளில், நீங்கள் ஒரு மாதத்தில் 5 முறை பயணம் செய்த பிறகு,  6வது முறையில் இருந்து அடுத்து நீங்கள் எத்தனை முறை  பயணம் மேற்கொண்டாலும் 50 சதவீத கட்டணம்  செலுத்தினால் போதும் என்ற இந்த சலுகையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

அதேபோல் முதலில் எந்த பெயரில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறதோ, தொடர்ந்து அதே பெயரில் முன்பதிவு செய்தால்தான் இந்த கட்டண சலுகையை பெறமுடியும்.

தமிழக அரசு அறிவித்த மற்றொரு அறிவிப்பில், தனியார் ஏசி பேருந்துகளின்  கட்டணத்தை விட அரசு ஏசி பேருந்துகளில் கட்டணம் குறைவாக இருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும், தற்போது அதிகளவு ஏசி பேருந்துகளில் முன்பதிவு செய்வதால் வரும் ஜூன் மாதம் வரை அனைத்து ஏசி பேருந்துகளையும் இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Previous article1 கோடி நஷ்டஈடா இல்லை மன்னிப்பா!! தனது கவுன்டவுனை ஸ்டார் செய்த கனிமொழி!! விழிபிதுங்கும் அண்ணாமலை!!
Next articleதிமுகவுக்கும் ஜி ஸ்கொயருக்கும் தொடர்பா! உளறிய உதயநிதி!