கோதுமை வெங்காய போண்டா..!! செம டேஸ்டா செய்யலாம் வெறும் 10 நிமிடத்தில் செய்யலாம்..!!

0
125
Godhumai Bonda Recipe

Godhumai Bonda Recipe: அனைவருக்கும் மாலை நேரத்தில் அதிலும் இந்த மழைக்காலங்களில் சூடாக ஸ்நாக்ஸ் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். ஆனால் என்ன செய்வது என்று தான் தெரியாது. சில ஸ்நாக்ஸ் வகைகளை செய்வதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால் அதிகமாக யாரும் செய்ய மாட்டார்கள். கடைகளில் வாங்கி வந்து அதனை சாப்பிடுவார்கள். ஆனால் நம் வீட்டில் சூடாக செய்து சாப்பிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாம் இந்த பதிவில் சுவையான கோதுமை வெங்காய போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு – 1 கப்
  • அரசி மாவு – 1 ஸ்பூன்
  • பெரிய வெங்காயம் -1 (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
  • மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  • கொத்தமல்லி, கருவேப்பிலை – சிறிதளவு
  • பேக்கிங் சோடா- 1பிஞ்ச்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு கப் கோதுமை மாவு எடுத்து, அதனுடன் 1 ஸ்பூன் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய் தூள், பேக்கிங் சோடா, தேவையான அளவு உப்பு, நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்துக்கொள்ள வேண்டும்.

பிறகு அதில் சிறிது சிறிதாக நீர் சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும். போண்டா பதத்திற்கு அதாவது வடைக்கு அரைக்கும் பதம் போல் மாவு இருக்க வேண்டும். ரொம்பவும் கெட்டியாகவோ, அல்லது தோசை மாவு போன்றோ இருக்க கூடாது.

இப்போது அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். இப்போது மாவை எடுத்து அதில் போண்டா போன்று சிறு சிறு துண்டாக போட்டுக்கொள்ள வேண்டும். தீயை மீடியமில் வைத்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொறிக்க வேண்டும்.

இவ்வாறாக அனைத்தை பொறித்து எடுத்தால் சுவையான கோதுமை போண்டா (Godhumai Bonda Seivathu Eppadi) தயார்.

மேலும் படிக்க: அம்மா தோசைக்கு செய்ற இந்த கார துவையல் யாருக்கெல்லாம் பிடிக்கும்..!! 3 பொருள் போதும் சட்டுனு ரெடி பண்ணிடலாம்..!!