மாணவர்களுக்கு இறையன்பின் இறுதி உத்தரவு!! பள்ளிகளில் இனி தொடக்கம்!!

0
193
God's final orders to students!! Schools start now!!
God's final orders to students!! Schools start now!!

மாணவர்களுக்கு இறையன்பின் இறுதி உத்தரவு!! பள்ளிகளில் இனி தொடக்கம்!!

தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான கோடை விடுமுறை மே மாதம் முடிந்த நிலையில், வெயில் குறையாததன் காரணமாக பள்ளிகளின் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது.

அதாவது ஜூன் ஒன்றாம் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் அனைத்தும் சில நாட்கள் தாமதமாக்கப்பட்டு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கு ஜூன் 12 ஆம் தேதியும், ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு ஜூன் 14 ஆம் தேதியும் திறக்கப்பட்டது.

இவ்வாறு பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களின் படிப்பு திறன் பாதிக்காத வகையில் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

இதனையடுத்து மாணவர்கள் அனைவரும் தங்களை தேர்வுகளுக்கு தயார் படுத்தி வருகின்றனர். தற்போது தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று தனது பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

இவர் ஓய்வு பெரும் இந்நாளில் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தன்னுடைய இறுதி உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில் அவர் கூறி இருப்பதாவது,

இப்போது வரும் நாட்களில் மாணவர்கள் புத்தகங்கள் வாசிக்கும் திறன் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த வாசிப்பு பழக்கத்தை மாணவர்களிடம் கொண்டு வர விரும்புவதாக கூறி உள்ளார்.

மேலும், ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களுக்கு வாசிப்போர் மன்றம் உருவாக்கவும், இந்த மன்றத்தில் மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் தான் படித்து அறிந்த புத்தகங்களை பற்றி பேச வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவால் மாணவர்களின் படிப்பு திறன் மேலோங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே மாணவர்கள் அனைவரும் இந்த முடிவால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Previous articleநடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை!! தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
Next articleதமிழ்நாட்டிற்கு வரும் புதிய பேருந்துகள்!! இனி மஞ்சள் நிறத்தில் மாற்றம்!!