இந்தியாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்! உ.பி.யில் தங்க மலைகள் கண்டுபிடிப்பு!! என்ன செய்ய போகிறது அரசு?
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பெரிய மாவட்டமான சோன்பத்ராவில் இரண்டு பெரிய தங்கமலைகளை இந்திய புவியியல் ஆய்வு மையம் 20 ஆண்டு கால ஆய்வுக்கு பின் கண்டுபிடித்து அசத்தியுள்ளது.
சோன்பத்ராவில் உள்ள சோன் பஹாடி மற்றும் ஹார்டி பகுதியில் தங்க மலைகளை கண்டுபிடித்துள்ளதாக அந்த மாவட்டத்தின் சுங்க அதிகாரி கேகே ராய் கூறினார். மேலும்,இங்கு ரூ.12 லட்சம் கோடி மதிப்புள்ள 3350 டன் தங்கம் இருப்பதாகவும், இந்தியாவின் கையிருப்பில் இருக்கும் தங்கத்தை காட்டிலும் பல மடங்கு இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த சுரங்கத்தை இணைய வழி ஏலம் விட அரசு முடிவு செய்துள்ளதாகவும், அங்கு பல அரிய தாதுக்களும் இருப்பதாக ராய் தெரிவித்தார். இந்த மதிப்பிடுகள் உண்மையாக இருக்கும் பட்டத்தில் உலக நாடுகளின் கையில் உள்ள தங்க இருப்பு வைத்திருக்கும் பட்டியலில் 2 அல்லது 3 வது இடத்திற்கு இந்தியா முன்னேறும்.
உலக பொருளாதார மந்த நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் விலையில் வரலாறு காணத வகையில் உயர்ந்துள்ளது. இந்தியாவிற்கு கிடைத்திற்கும் இந்த அரிய வாய்ப்பை அரசு எப்படி பயன்படுத்திக் கொள்ள போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது .