மீண்டும் உயரும் தங்கம் விலை!! அவதிக்குள்ளாகும் நடுத்தர மக்கள்!!
கடந்த சில நாட்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகளும், பெண்களும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சில நாட்கள் மட்டும் விலை குறைந்து கொண்டே சென்றது. தமிழ் புத்தாண்டையொட்டி தங்கம் விலை மீண்டும் தற்போது உயர்ந்துள்ளது. வழக்கமாக விழா காலங்களில் தங்கத்தின் விலை அதிகரிக்க கூடும்.
வெள்ளிப் பொருட்களின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நம் இல்லங்களில் வெள்ளி பொருட்களை வாங்கி அடுக்கி வைக்கும் வழக்கமும் சில வீடுகளில் உண்டு. கல்யாணத்தின் போது சீர்வரிசையாக வெள்ளி பாத்திரங்கள் மற்றும் இதர பொருட்களை வழங்கும் வழக்கமும் உண்டு. அதனால் வெள்ளிப் பொருட்களை மிகுதியாக வாங்கும் பழக்கமும் நம்மிடத்தில் உண்டு தான். அதனால் வெள்ளிப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்து கொண்டே செல்கிறது.
இன்றைய (ஏப்ரல் 14) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.45,760ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ரூ.5.720ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,168ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 49,344ஆக விற்பனையாகிறது.
வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ. 1.20 காசுகள் உயர்ந்து ரூ.83.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 83,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.