மகளிர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பைக் டாக்ஸி அறிமுகம்!! பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு!!

0
188
Introducing bike taxi to fulfill the expectations of women!! Great reception among women!!
Introducing bike taxi to fulfill the expectations of women!! Great reception among women!!

மகளிர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பைக் டாக்ஸி அறிமுகம்!! பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு!!

சென்னை மெட்ரோவில் இருந்து,  பெண்களுக்கு மட்டும் பைக் டாக்ஸி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.நாடு முழுவதும் ராபிட்டோ என்னும் பைக் டாக்ஸி சேவை பயன்படுத்தக்கூடியோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக டெல்லி, தமிழகத்தின் மதுரை உள்ளிட்ட நகரங்களில் முற்றிலுமாக  பைக் டாக்ஸி தடை செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில நகரங்களில் போக்குவரத்து காரணமாகவும், பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் முறையாக போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்த பிறகும் பைக் டாக்ஸி சேவை தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பைக் டாக்ஸி நாள்தோறும் வளர்ச்சி அடைந்தே வருகிறது.

இளைஞர்களும், ஆண்களும் சர்வ சாதாரணமாக ராபிட்டோ பைக் டாக்ஸி பயன்படுத்துகின்றனர். ஆனால் பெண்கள் ராபிட்டோ பயன்படுத்தும் போது, அவர்களுடைய செல்போன் நம்பர் ஆண் ஓட்டுநருக்கு சென்றுவிடும் என்பதாலும், இதனால் பிரச்சனை ஏற்படும் காரணத்தாலும் பெண்கள் ராபிட்டோ போன்ற பைக் டாக்ஸி சேவையை பயன்படுத்த தயக்கம் காட்டி வருகின்றனர்.இந்த பிரச்சனையை போக்க ராபிட்டோ, ஒலி, யூபர் உள்ளிட்ட நிறுவன போன்ற நிறுவனங்களும் சிந்தித்து வருகின்றனர்.

சென்னை பெருநகரத்தில் கோயம்பேடு உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்தும், எக்மோர், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் இருந்தும் இரவு நேரங்களில் வீடு திரும்பும் பெண்கள் உரிய ஆட்டோ கிடைக்காமல், உரிய போக்குவரத்து வசதி கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனை போக்கும் வகையில் சென்னை மெட்ரோ நிலையத்தில் இருந்து, பெண்களுக்கு மட்டும் பிரத்யேக  பெண்கள் பைக் டாக்ஸி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ராபிட்டோ செயலி மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் முதற்கட்டமாக ஐந்து மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்கள் மட்டுமே இயக்கும் ராபிட்டோ பைக் இணைப்பு வாகன வசதி தொடங்கப்பட்டுள்ளது.

தேவை அடிப்படையில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என பெற்றோரை நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.மகளிர் பேருந்து, மகளிர் ஆட்டோ என இப்போது மகளிருக்கென கொண்டுவரப் பட்டுள்ள மகளிர் பைக் டாக்ஸி சேவையையும் பெண்கள் வரவேற்றுள்ளனர்.