GOLD RATE: தொடர்ந்து சரிவில் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!!

0
257
#image_title

GOLD RATE: தொடர்ந்து சரிவில் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!!

சிறந்த முதலீடாக விளங்கும் தங்கத்தை வாங்க மக்கள் ஆசைக் கொள்கின்றனர்.தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே உச்சங்களை தொட்டு வருகிறது.

இதே நிலை ஏற்பட்டால் கூடிய விரைவில் தங்கம் ரூ.50 ஆயிரத்தை நெருங்கி விடும்.இதனால் சாமானியர்களின் தங்கம் வாங்கும் கனவு வெறும் கனவாகவே போய்விடும்.

கடந்த இரு தினங்களுக்கு முன் தங்கம் ஜெட் வேகத்தில் இருந்து வந்தது.ஆனால் நேற்றும் இன்றும் அதன் விலை சரிவில் இருக்கிறது.

இருந்த போதும் இந்த விலை குறைவு பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இல்லை.காரணம் தங்கம் விலை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்து விட்டது.ஆனால் தங்கம் விலை குறையும் பொழுது ரூ.10,ரூ.20 என்று மட்டுமே குறைகிறது.

நேற்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6,200க்கும் ஒரு சவரன் ரூ.49,600க்கும் விற்பனையானது.இந்நிலையில் இன்று அதன் விலை மேலும் குறைந்து இருக்கிறது.

அதன்படி,சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து,ரூ.49,480க்கும்,ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.6,185க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.53,976க்கும் விற்பனையாகின்றது.

தங்கம் விலை குறைந்த போதும் வெள்ளி விலை குறையவில்லை.கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ80.50க்கும்,ஒரு கிலோ ரூ.80,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleதேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்த அதிமுக!
Next articleஒரே இடத்தில் கூடிய தமிழக அரசியல் கட்சி பெரும் புள்ளிகள் காரணம் என்ன?