சற்று முன்: திடீரென்று சரிந்தது தங்கம் விலை!! இவ்ளோ கொறஞ்சுடுச்சா?!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து உள்ளது.
திருமணம் மட்டும் அல்லாமல் எந்த ஒரு நல்ல நிகழ்விற்கு தங்கம் அளிப்பதே நம் பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஆனால் தங்கத்தின் விலையின் காரணமாக தற்போது அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் கட்ட பரவல் என்பது மிகவும் குறைந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகளில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு இடையே தங்கத்திற்கான தேவை என்பது மிகவும் அதிகரித்து உள்ளது.
சென்னையில் தங்கம் விலை கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல் 36 ஆயிரம் ரூபாயாக உயர்ந்து காணப்பட்டது. மேலும் பெரியதாக எந்த விதமான மாற்றங்கள் இல்லை என்றாலும், ஓரிரு நாட்கள் குறைந்து இருக்கும்.
தங்கம் குறைந்து காணப்பட்டாலும் அடுத்த நாள் உடனடியாக கிடுகிடுவென உயர்ந்து விடும். இந்த நிலையில் நேற்று முன்தினம் 36 ஆயிரத்து 352 விற்க்கப்பட்டு வந்த தங்கம், திடீரென நேற்று 36 ஆயிரத்து 240 ஆகக் குறைந்தது. மேலும், இதனை தொடர்ந்து இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்து உள்ளது.
இன்றைய விலை நிலவரத்தின்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 4500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 36,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதனை தொடர்ந்து வெள்ளி விலை 40 காசுகள் அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ71.90க்கு விற்கப்படுகிறது.
மேலும், ஒரு கிலோ வெள்ளி விலையானது 71.900 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும் இதனை கண்ட இல்லத்தரசிகளும், மக்கள் விரைந்து இன்று தங்கம் வாங்க விரைந்து உள்ளனர்.