Breaking News

GOLD RATE: அதிர வைக்கும் தங்கம்!! இன்று அதன் விலை நிலவரம்!!

GOLD RATE: அதிர வைக்கும் தங்கம்!! இன்று அதன் விலை நிலவரம்!!

கடந்த சில வாரங்களாக தங்கம் விலை புது புது உச்சத்தை தொட்டு வருகிறது.வரலாறு காணாத அளவிற்கு தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே இருப்பதால் சாமானியர்கள்,நகை விரும்பிகள் கலக்கத்தில் இருக்கின்றனர்.

நேற்று முதல் தங்கம் சவரனுக்கு ரூ.52 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.போகின்ற போக்கை பார்த்தால் தங்கம் விலை பவுனுக்கு ரூ.53 ஆயிரத்தை கடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

நேற்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6,500க்கும் ஒரு சவரன் ரூ.52,000க்கும் விற்பனையானது.இந்நிலையில் இன்று அதன் விலை மேலும் அதிகரித்து இருக்கிறது.

அதன்படி,சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.360 அதிகரித்து,ரூ.52,360க்கும்,ஒரு கிராம் ரூ.45 அதிகரித்து ரூ.6,545க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.392 அதிகரித்து ரூ.57,120க்கு விற்பனையாகின்றது.

தங்கத்தை போல் வெள்ளி விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கிராமுக்கு ரூ.1.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ85.30க்கும்,ஒரு கிலோ ரூ.85,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.