சாமானியர்களை ஆட்டி படைக்கும் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!

0
329
#image_title

சாமானியர்களை ஆட்டி படைக்கும் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!

நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தங்கத்தின் மீது ஆசை வைக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். புது புது ஆபரணங்களை நகை கடைகள் அறிமுகம் செய்தாலும் தங்கத்தின் மீது உள்ள ஈர்ப்பு மற்ற நகைகள் மீது ஏற்படுவதில்லை என்பது தான் நிதர்சனம்.

நம் நாட்டு முதலீட்டாளர்களின் முதல் சாய்ஸ் தங்கம் தான். தங்கம் விலை எப்பொழுது குறையும் என்று சாமானியர்கள் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அதன் விலை இறங்காமல் ஏறிக் கொண்டே செல்கிறது.

22 கேரட் கோல்ட்: நேற்று ஒரு கிராம் ரூ.5,830க்கு விற்ற நிலையில் இன்று ரூ.10 அதிகரித்து ரூ.5,840க்கு விற்பனையாகி வருகின்றது. சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.46,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் கோல்ட்: நேற்று ஒரு கிராம் ரூ.6,360க்கு விற்ற நிலையில் இன்று ரூ.11 அதிகரித்து ரூ.6,371க்கு விற்பனையாகி வருகின்றது. 8 கிராம் தங்கம் ரூ.88 குறைந்து ரூ.50,968க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி: விலை மாற்றம் இன்றி முந்தின நாள்விலைப்படி 1 கிராம் ரூ.77.50க்கும், 1000 கிராம் ரூ.77,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகைப்பிரியர்கள், சாமானியர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.

Previous articleதருமபுரி மாவட்டத்தில் அரசு வேலை! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!
Next articleதமிழ்நாட்டில் 38 தான்.. 46 ஆக உயர்த்தும் திட்டம் இல்லை – தமிழக அரசு தெளிவு!