தமிழ்நாட்டில் 38 தான்.. 46 ஆக உயர்த்தும் திட்டம் இல்லை – தமிழக அரசு தெளிவு!

0
204
#image_title

தமிழ்நாட்டில் 38 தான்.. 46 ஆக உயர்த்தும் திட்டம் இல்லை – தமிழக அரசு தெளிவு!

கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை உயருகிறது என்ற செய்தி தான் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

2019 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை 32 மாவட்டங்களை கொண்டிருந்த தமிழகம் அந்த ஆண்டில் தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகியவை புதிய மாவட்டங்கள் என்று அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்ததால் மொத்தம் 37 மாவட்டங்களாக எண்ணிக்கையில் உயர்ந்தது. அந்த பின்னர் ஒரு வருடம் கழித்து நாகையில் இருந்து 38 மாவட்டமாக மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டது.

மாவட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்த காரணம்…

தமிழ்நாட்டில் உள்ள ஒருசில மாவட்டங்ள் அதிக நிலப்பரப்பு மற்றும் மக்கள் தொகை கொண்டிருக்கின்றது. இவ்வாறு உள்ள மாவட்டங்களின் முக்கிய நகரங்களை கொண்டு புதிய மாவட்டங்களை உருவாக்குவதன் மூலம் நிர்வாகப் பணிகள், அரசு நலத்திட்ட பணிகள் அனைத்தும் சுலபமாக செய்ய முடியும் என்பதினாலும்.. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இவை இருப்பதினாலும்.. தனி மாவட்டங்கள் உருவாக்கப்படுகிறது.

தற்பொழுது வரை 38 மாவட்டங்களை கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் விரைவில் 8 புதிய மாவட்டங்கள் இணைய உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய வண்ணம் உள்ளது.

கும்பகோணம், பொள்ளாச்சி, பழனி, கோபிச்செட்டிபாளையம், ஆரணி, விருத்தாச்சலம், கோவில்பட்டி, ஆத்தூர் ஆகிவையவை தனி மாவட்டளாக உருவாகி என்றும் இதற்கான அறிவிப்பை தமிழக அரசு குடியரசு தினத்தன்று வெளியிடும் என்று உலா வந்த செய்தியால் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால் குடியரசு தினத்தன்று முதல்வர் ஸ்டாலின் இது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாததால் எதிர்பார்ப்பில் இருந்த மக்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் புதிய மாவட்டங்கள் உருவாக உள்ளதாக பரவும் செய்தி குறித்து தமிழக அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

அதாவது, தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள் மட்டும் தான்.. அரசிடம் புதிய மாவட்டங்களை உருவாக்கும் திட்டம் தற்பொழுது வரை இல்லை.. புதிய மாவட்டங்கள் உருவாகிறது என்று பரவும் செய்தி முற்றிலும் பொய்யான ஒன்று.. இதை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு அதிகாரிகள் தெளிவுபடுத்தி இருக்கின்றனர்.