மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! கல்வித்தொகை உயர்த்தி புதிய அரசாணை வெளியீடு!! 

Photo of author

By Amutha

மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! கல்வித்தொகை உயர்த்தி புதிய அரசாணை வெளியீடு!! 

Amutha

Good news for disabled people!! Issue of tuition fee hike decree!!

மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! கல்வித்தொகை உயர்த்தி புதிய அரசாணை வெளியீடு!! 

மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கான கல்வி தொகையை இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.

22,300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 14 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசால் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகையை இரு மடங்காக உயர்த்தி  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருடாந்திர கல்வி உதவித்தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ரூ.3000-லிருந்து ரூ.6000 ஆகவும், 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ரூ.4000-லிருந்து 8000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பள்ளி படிப்பை தவிர்த்து பட்டப் படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் கல்வித் தொகையானது தமிழக அரசால் உயர்த்தப்பட்டுள்ளது.  பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூ.6000-லிருந்து ரூ.12000 ஆகவும் தொழிற்கல்வி மற்றும் முதுகலை படிப்பு மாணவர்களுக்கு ரூ.7000-லிருந்து ரூ.14,000 ஆகவும் உயர்த்தி புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.