அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! 12 நாட்கள் விடுமுறை அளித்த மத்திய அரசு!!
மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து சில ஊதியம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு கொண்டே வருகின்றது.அதில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.அந்த வகையில் தற்பொழுது அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளையும் செய்து வருகின்றது.
அந்த வகையில் தற்பொழுது அரசு ஊழியர்களுக்கு பண்டிகை நாட்களில் விடுமுறை விடப்படுவது வழக்கம். அதனை போன்று இந்த வருடம் வர இருகின்ற பண்டிகை நாட்களை முன்னிட்டு 14 நாட்கள் விடுமுறை விட வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றது.
மேலும் மத்திய அரசானது முக்கிய பண்டிகைகளுக்கு 3 நாட்கள் வரை விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் இது விருப்பத்தின் பேரில் மட்டும் எடுத்துகொள்ள முடியும் என்று உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு குடியரசு தினம் ,சுகந்திர தினம்,மகாத்தமா காந்தி பிறந்த நாள் ,புத்த பூர்ணிமா ,கிறிஸ்துவம் ,தசரா ,புனித வெள்ளி ,மகாவீர் ஜெயந்தி ,தீபாவளி போன்ற அரசு விடுமுறை நாட்களில் கட்டாயம் ஊழியர்களுக்கு மத்திய அரசு விடுமுறை அளிக்கும் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் பொதுமக்கள் அதிக அளவில் கொண்டாடப்படும் தினங்களான ஹோலி பண்டிகை ,பொங்கல் ,விநாயகர் சதுர்த்தி ,ஆடி பெருக்கு,ஓணம் பண்டிகை மற்றும் தேர் திருவிழா போன்ற நாட்களில் விருப்பத்தின் பேரில் 3 நாட்கள் விடுமுறை எடுத்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.