பொங்கலை முன்னிட்டு குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்! மாதம்தோறும் ரூ1000 வழங்கும் திட்டம் நடைமுறை!

Photo of author

By Parthipan K

பொங்கலை முன்னிட்டு குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்! மாதம்தோறும் ரூ1000 வழங்கும் திட்டம் நடைமுறை!

Parthipan K

Good news for heads of families ahead of Pongal! Rs 1000 every month scheme implemented!

பொங்கலை முன்னிட்டு குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்! மாதம்தோறும் ரூ1000 வழங்கும் திட்டம் நடைமுறை!

தமிழகத்தில் தேர்தலின் போது இரண்டு கட்சிகளும் வாக்குறுதிகள் கொடுத்தார்கள்.அதில் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்தனர்.ஆனால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை அதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.இந்நிலையில் அமைச்சர்களிடம் பேட்டி எடுக்கும் பொழுது இது குறித்து பல்வேறு கேள்விகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

முதல்வர் அதற்கான ஆலோசனை நடத்தி வருகின்றார்.கூடிய விரைவில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறி வருகின்றார்.மேலும் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் அனைவருடைய வங்கி கணக்கில் போடுவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரி அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

மேலும் அரசு வழங்கும் எந்த ஒரு திட்டத்தையும் பெறாத குடும்பதலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்குவதற்கான கோப்பில் ஆளுநர் தமிழிசை கையெழுத்திடுள்ளார்.கூடிய விரைவில் தமிழகத்திலும் இந்த திட்டம் நடைமுறை படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.