இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி..! இன்று தங்கம் விலை மேலும் குறைவு!

0
235
#image_title

இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி..! இன்று தங்கம் விலை மேலும் குறைவு!

சென்னை,

ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் விலை உயர்ந்து விற்கப்பட்ட தங்கம் இன்று விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

இன்னும் சில மாதங்களில் தங்கம் விலை எதிர்பாராத உச்சத்தை தொட்டு விடும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருவதால் சாமானியர்கள், இல்லத்தரசிகள் கலக்கமடைந்து இருக்கின்றனர்.

நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.46,712 என்று விற்பனையானது. இந்நிலையில் இன்று அதன் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.5,839க்கு விற்பனையான நிலையில் இன்று அதன் விலை குறைந்து விற்பனையாகி வருகிறது.

அதன்படி, சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.72 குறைந்து, ரூ.46,640க்கும், ஒரு கிராம் ரூ.9 குறைந்து, ரூ.5,830க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.50,880க்கு விற்பனையாகின்றது.

அதேசமயம், வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.76.50க்கும், ஒரு கிலோ ரூ.76,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து சரிவில் இருப்பதால் சாமானியர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.