OAP பென்சன் திட்டம்: மாதம் ரூ.1000 பெற விண்ணப்பம் செய்வது எப்படி?

0
198
#image_title

OAP பென்சன் திட்டம்: மாதம் ரூ.1000 பெற விண்ணப்பம் செய்வது எப்படி?

நம் நாட்டில் ஆதரவற்ற.. வயது முதுமை அடைந்த நபர்கள் அதிகம் உள்ளனர். முறையான உணவு கிடைக்காமல் கஷ்டத்தில் வாழ்க்கையை ஓட்டி வரும் முதியவர்களை அவர்கள் பெற்ற பிள்ளைகளே முறையாக கவனித்துக் கொள்வதில்லை.

சிலர் எதிர்கால வாழ்க்கைக்கு போதிய சேமிப்பு செய்து வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். பெரும்பலானோர் தங்கள் குழந்தைகளுக்காகவே வாழ்ந்து எந்த சேமிப்பும் செய்யாமல் வயதான காலத்தில் வறுமைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர்.

இவ்வாறு ஆதரவற்ற நிலைமையில் இருக்கும் தகுதி வாய்ந்த முதியவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு Old Age Pension Allowance Scheme(OAP) அதாவது முதியோர் ஓய்வூதிய திட்டம் என்ற பெயரில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கி வருகிறது.

இந்த திட்டத்தில் பயன்பெற என்னென்ன தகுதி இருக்க வேண்டும்?

முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெற இந்திய குடிமகன்களாக இருக்க வேண்டும்.

60 வயதை கடந்தவர்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய முடியும். ஆதரவற்ற முதியோர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

எவ்வாறு விண்ணப்பம் செய்வது?

மேலே குறிப்பிட்டுள்ள தகுதி இருக்கும் முதியோர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தாலுக்கா அலுவலகத்திற்கு சென்று Old Age Pension Allowance Scheme விண்ணப்பத்தை பெற்று பூர்த்தியிடவும்.

முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டிய ஆவணங்கள்…

*60 வயது நிரம்பியதற்கான சான்று(ஆதார், ரேசன் கார்டு, ஓட்டர் ஐடி)
*இருப்பிடச் சான்று

இந்த ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைத்து தாலுக்கா ஆபிஸில் வழங்க வேண்டும். உங்கள் விண்ணப்பம் விஏஓ அதாவது கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

விஏஓ தங்கள் இருப்பிடத்திற்கு வந்து ஆய்வு செய்த பின்னர்… இந்த திட்டத்திற்கு நீங்கள் தகுதி வாய்ந்தவர் என்று உறுதி செய்தால் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். பிறகு மாந்தோறும் ரூ.1000 அஞ்சல் அல்லது தங்கள் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும்.