நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி: அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!! இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தங்கம் விலை மளமளவென உயர்ந்து வருகிறது.நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தங்கம் விலை உச்சம் தொட்டு வருவதால் நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
நம் மக்களுக்கு மற்ற ஆபரணங்களை காட்டிலும் தங்கம் என்றால் தனி பிரியம்.இதனால் புது புது வடிவமைப்பில் தங்கம் வாங்க ஆசைக் கொள்கின்றனர்.ஆனால் தங்க வாங்குவது பணக்காரர்களுக்கு மட்டுமே சுலபமாக இருக்கிறது.
நடுத்தர மக்களுக்கு அவை வெறும் கனவே இருந்து வருகிறது.சிறுக சிறுக சேர்த்து நகை வாங்கலாம் என்றால் அதன் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
நேற்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6,545க்கும் ஒரு சவரன் ரூ.52,360க்கும் விற்பனையானது.இந்நிலையில் இன்று அதன் விலை சற்று குறைந்து இருக்கிறது.
அதன்படி,சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.280 குறைந்து ரூ.52,080க்கும்,ஒரு கிராம் ரூ.35 குறைந்து ரூ.6,510க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.56,816க்கு விற்பனையாகின்றது.
தங்கத்தை போல் வெள்ளி விலையும் குறைந்து இருக்கிறது.கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ85க்கும்,ஒரு கிலோ ரூ.85,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.