கோ பேக் மோடி என்று கூறினோம்! தற்பொழுது கெட் அவுட் மோடி என்று செய்ய வேண்டும்! அமைச்சர் உதயநிதி பேச்சு!

0
140
#image_title

கோ பேக் மோடி என்று கூறினோம்! தற்பொழுது கெட் அவுட் மோடி என்று செய்ய வேண்டும்! அமைச்சர் உதயநிதி பேச்சு!

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் “முதலில் கோ பேக் மோடி என்று கூறினோம். தற்பொழுது கெட் அவுட் மோடி என்று செய்ய வேண்டும்” என்று பேசியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கரூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் நிற்கும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றார்.

அப்பொழுது தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் “மகளிர் உதவித் தொகைக்கு சுமார் 1.60 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 1.16 கோடி பேருக்கு மகளிர் உதவித் தகை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சிலருக்கு மகளிர் உதவித் தொகை கிடைக்கவில்லை. 6 அல்லது 7 மாதங்களில் விண்ணப்பித்தவர்களில் தகுதி வாய்ந்த 1.6 கோடி பேருக்கும் மகளிர் உதவித் தொகை கிடைத்து விடும்.

கடந்த மக்களவை தேர்தலில் ஏமாற்றி விட்டீர்கள். இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். கடந்த முறை கோ பேக் மோடி என்று கூறினோம். இந்த முறை கெட் அவுட் மோடி என்று செய்ய வேண்டும். நீங்கள் எங்களுக்கு போடும் ஓட்டுதான் மாடிக்கு வைக்கும் வேட்டு ஆகும்.

திமுக ஆட்சியில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இரண்டு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இது போல பல திட்டங்கள் விவசாயிகளுக்காக நம்முடைய முதல்வர் வைத்துள்ளார். நம்முடைய முதல்வருக்கு நீங்கள் தான் ஆதரவு தர வேண்டும்” என்று பேசினார்.