வாகன ஓட்டிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி! அடி மட்டத்திற்கு போகும் பெட்ரோல் டீசல் விலை!
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனும் தங்களால் முடிந்தவரை ரஷ்யாவிடம் போரிட்டு வருகின்றனர். ரஷ்யாவை எதிர்க்க உக்ரைனுக்கு அதிக அளவில் ஆயுதங்கள் தேவைப்பட்டது. இப்பொழுது அனைத்து நாடுகளிலும் உங்களது ஆதரவு களைவிட ஆயுதங்களை தேவை என உக்ரைன் அதிபர் கூறினார். இருப்பினும் ரஷ்யா உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றியது. இவ்வாறு இருக்கையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்களுக்கு தடை விதிக்குமாறு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் கேட்டுக்கொண்டார்.
அதற்கு இணங்க தற்பொழுது அமெரிக்காவில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு தற்போது தடை விதித்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் உக்ரைன் மீது போர் தொடுப்பதை நிறுத்துமாறு ரஷ்யாவிடம் வலியுறுத்தி வந்தனர். ஆனால் ரஷ்யா சிறிதளவும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து போர் நடத்தியது. அதனால் உக்ரைன் மீது போரிட்டதற்கு தற்பொழுது ரஷ்யாவிடம் இவ்வாறான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதேபோல ரஷ்யாவின் மூலப் பொருள்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வதில் சில நாடுகளுக்கு தடை விதித்து ரஷ்ய அதிபர் கையெழுத்திட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இவ்வாறு இரு நாடுகளுக்கிடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அனைத்து நாடுகளிலும் கச்சா எண்ணெய் விலை அதிக அளவில் காணப்படுகிறது. பல நாடுகள் ரஷ்யாவின் இறக்குமதி பொருட்களுக்கு தடை விதித்து இருப்பதால் தற்பொழுது ரஷ்யா, இந்தியாவின் சந்தை விலையை விட 25 முதல் 27 சதவீதம் குறைவான விலையில் கச்சா எண்ணெய் வழங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவ்வாறு சந்தை விலையை விட குறைவாக ரஷ்யா ,கச்சா எண்ணையை தருமானால் கட்டாயம் பெட்ரோல் டீசல் விலை குறையும். தற்பொழுது ரஷ்யா மற்றும் இந்தியாவிற்கு இடையே இது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறியுள்ளனர். பணம் பரிமாற்றத்தில் சிக்கல் உள்ளதால் மாற்று வழியை உபயோகப்படுத்து செயல்படுத்த உள்ளதாகவும் கூறுகின்றனர். அவ்வாறு ரஷ்யா,இந்தியாவின் சந்தை விலையை விட குறைவாக தருமானால் கட்டாயம் பெட்ரோல் டீசல் விலை குறைய நேரிடும்.