மக்களுக்கு குட் நியூஸ்! தமிழகத்தை அடுத்த 6 நாட்களுக்கு வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை!!
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் அண்டை மாநிலமான புதுச்சேரி,காரைக்காலில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோவை,திண்டுக்கல்,தேனி,நீலகிரி,கள்ளக்குறிச்சி,திருச்சி,தருமபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடும்.சென்னையை பொறுத்தவரை புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்நிலையில் இன்று அதிகாலை கடலூர் மாவட்டம் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளான சிதம்பரம் நகரம்,அண்ணாமலை நகர்,சிவபுரி,மேலக்குடி,பரங்கிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.அதேபோல் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.கடந்த சில தினங்களாக தமிழகத்தை வெயில் வாட்டி வந்த நிலையில் தற்பொழுது தொடர் கன மழையால் வெப்பம தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மனம் குளிர்ந்துள்ளது.