மக்களுக்கு குட் நியூஸ்.. இன்று தங்கம் விலை இறங்குமுகத்தில்..!

Photo of author

By Divya

மக்களுக்கு குட் நியூஸ்.. இன்று தங்கம் விலை இறங்குமுகத்தில்..!

இன்றைய தங்கம் விலை சற்று இறங்கு முகத்தில் இருக்கின்றது. நேற்று முன்தினம் தங்கம் விலை இறக்கம் கண்டது. நேற்று தங்கம் விலையில் மாற்றம் இன்றி முந்தின நாள் விலை அடிப்படையிலேயே விற்கப்பட்ட நிலையில் இன்று பவுனுக்கு 80 ரூபாய் குறைந்து விற்பனையாகி வருகிறது.

கடந்த சில வாரங்களாக மீடியம் லெவலில் தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. தை மாதம் நெருங்கிவிட்டதால் தங்கம் விலை தாறுமாறாக ஏறிவிடும் என்று சாமானியர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய தங்கம் விலை அதற்கு முந்தின நாள் விலைப்படியே விற்பனையான நிலையில் இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.80 குறைந்து, ரூ.46,480க்கும், ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.5,810க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.50,704க்கும் விற்பனையாகின்றது.

வெள்ளி விலையில் மாற்றம் இன்றி நேற்றைய விலைப்படி ஒரு கிராம் ரூ.77.50க்கும், ஒரு கிலோ ரூ.78,500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.