பொதுமக்களுக்கு பொன்னான செய்தி!! சவரனுக்கு சற்று விலைகுறைந்த தங்கம்!! 

Photo of author

By Amutha

பொதுமக்களுக்கு பொன்னான செய்தி!! சவரனுக்கு சற்று விலைகுறைந்த தங்கம்!! 

Amutha

Good news for public!! A bit cheaper gold for Savaran!!

பொதுமக்களுக்கு பொன்னான செய்தி!! சவரனுக்கு சற்று விலைகுறைந்த தங்கம்!! 

இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய்  80 குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,280 க்கும் ஒரு கிராமிற்கு ரூபாய் 10  குறைந்து ரூ.5,535க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்திய மக்களின் அனைத்து சுப காரியங்களிலும் பயன்படுத்தப்படும் ஒன்று உள்ளது என்றால் அது தங்கம் தான். காதுகுத்து, தொடங்கி சடங்கு,திருமணம் என அனைத்து நிகழ்வுகளிலும் தங்கத்திற்கு என தனி மதிப்பு உண்டு.

இத்தகைய தங்கத்தின் விலையானது தொடர்ந்து ஏறுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. ஏழை,எளிய மக்கள் நினைத்து கூட பார்க்க முடியாத அளவு தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

கடந்த மார்ச் மாதம் முதல் தங்கத்தின் விலையானது ஒருநாள் குறைவதும்,மறுநாள் உயர்வதும் என மக்களுக்கு விளையாட்டு காட்டி வந்த நிலையில் தற்போது சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

அதேபோல வெள்ளியின் விலையும் ஒரு கிராமிற்கு 50 பைசாக்கள் குறைந்து  ரூ.80 ஆகவும், கிலோவிற்கு ரூ.500 குறைந்து ரூ.80,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம்              திங்கள்கிழமை           செவ்வாய்க்கிழமை

1 கிராம்              ரூ. 5,545                               ரூ.5535

1 சவரன்             ரூ.44280                               ரூ.44200

வெள்ளி

1 கிராம்              ரூ.80.50                                 ரூ. 80

1 கிலோ             ரூ.80,500                                ரூ. 80,000