அரிசி அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்!! பெயர் தெரியாத நிறுவனங்களின் பொருட்களை விற்க கூடாது – கண்டிஷன் போட்ட கூட்டுறவுத்துறை!!

0
125
#image_title

அரிசி அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்!! பெயர் தெரியாத நிறுவனங்களின் பொருட்களை விற்க கூடாது – கண்டிஷன் போட்ட கூட்டுறவுத்துறை!!

நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்ப்படுத்தும் நோக்கில் மத்திய மற்றும் மாநில அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்று பொது விநியோகத் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி புழுங்கல், பச்சரிசி, கோதுமையை இலவசமாகவும் ஒரு கிலோ துவரம் பருப்புக்கு ரூ.30, ஒரு கிலோ சர்க்கரைக்கு ரூ.13, ஒரு லிட்டர் பாமாயிலுக்கு ரூ.25 என விலை நிர்ணயம் செய்து விற்க்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரிசி அட்டைதாரர்களுக்கு வழக்கம் போல் வழங்கப்படும் பொருட்களுடன் சேர்த்து 1 கிலோ துவரம் பருப்பு மற்றும் 1 பாக்கெட் பாமாயில் இலவசமாக வழங்க தமிழக அரசு ஆலசோனை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தமிழக அரசு தரப்பில் இருந்து இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்பொழுது கூட்டுறவுத்துறை தரப்பில் இருந்து புது உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அது என்னவென்றால் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெயை தவிர்த்து சில பொருட்கள் ரேசன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது நெய், மஞ்சள் தூள், உப்பு, சோப், டீ தூள், மசாலா வகைகள், தேன், ரவை, கோதுமை மாவு உள்ளிட்ட பொருட்களை வெளி நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த பொருட்களில் தயாரிப்பு நிறுவனங்களின் பெயர், தயாரிக்கப்பட்ட தேதி, எக்ஸ்ப்பைரி தேதி என எதுவும் அச்சடிக்கப்படாமல் இருப்பதோடு, அதன் சுவை மோசமாக இருபாதகவும், உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் விதமாக இருப்பதாகவும் கூறி மக்கள் அந்த பொருட்களை வாங்க மறுகின்றனர்.

அதனால் அரிசி அட்டைதாரர்கள் பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கி ரேசன் ஊழியர்கள் மீதம் சில்லறை கொடுக்க நேர்ந்தால் சில்லறைக்கு பதில் டீ தூள், தீப்பெட்டி, உப்பு, சோப், சோப் தூள் உள்ளிட்ட தரமற்ற பொருட்களை வலுக்கட்டாயமாக கொடுத்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறது.

இதனால் ரேசன் ஊழியர்கள் பெயர் தெரியாத நிறுவனங்களின் பொருட்களை வாங்கி விற்க மறுக்கின்றனர். ஆனால் கூட்டுறவுத்துறையில் உள்ள சில அதிகாரிகள் ரேசன் ஊழியர்களை இது போன்ற பொருட்களை வாங்கி விற்க சொல்லி கட்டாயப்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தான் கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறது. அது என்னவென்றால் அரிசி அட்டைதாரர்களுக்கு பெயர் தெரியாத நிறுவனங்களின் பொருட்களை விற்க ரேசன் ஊழியர்களை அதிகாரிகள் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் ஒருவேளை இது போன்ற உப்பு, டீ தூள், மசாலா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய நினைத்தால் பிரபல நிறுவனங்களின் பொருட்களை வாங்கி விற்கலாம் என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இதனால் அரிசி அட்டைதாரர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Previous articleமீண்டும் உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை! கடும் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!
Next articleதீபாவளி பண்டிகையொட்டி குட் நியூஸ்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான புதிய அறிவிப்பு!!