மாணவர்களுக்கு குட் நியூஸ்! 9 ஆம் வகுப்பிற்கு முக்கிய பாடத்திட்டம் ரத்து!
இரண்டு ஆண்டுகள் கழித்து கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்த நிலையில் தற்போது தான் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து முடிந்துள்ளது. மேலும் பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. இவ்வாறு இருக்கையில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் இவற்றை தவிர்த்து தொழிற்கல்வி பாடம் என ஒன்றை மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். இந்தப் பாடத்திட்டம் ஆனது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகள் ஆகியவை மாணவர்களுக்கு கற்பித்து வருகிறது. இந்த தொழிற் கல்வி பாடத்தில் தையல் பயிற்சி அழகு கலை பயிற்சி ஆடை வடிவமைப்பு வேளாண்மை போன்றவை அடங்கும். இதனை மையமாக வைத்து மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடங்கள் பலப்பட்டு வருகிறது.
இந்தப் தொழிற்கல்வி படம் மூலம் அவர்கள் ஒரு தொழிலை கற்றுக்கொள்ள பள்ளியில் இருந்தே ஆரம்பித்த முதல்படி என்றும் கூறலாம். ஆனால் வரும் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த தொழிற்கல்வி பாடத் திட்டத்தை ரத்து செய்துள்ளனர். ஆகையால் 2022 மற்றும் இருபத்தி மூன்றாம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு இந்த தொழிற்கல்வி பாடம் கற்பிக்க படாது. அதேபோல நடப்பு கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு மட்டும் இனி தொழிற்கல்வி பாடம் கற்பிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.