தமிழக அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி!! அகவிலைப்படி உயர்வு?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு நாட்டில் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு மத்திய அரசால் உயர்த்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான அகவிலைப்படியை 4 விழுக்காடாக உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பது மத்திய அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே 42 விழுக்காடாக இருந்த அகவிலைப்படி மத்திய அரசின் அறிவிப்புக்கு பின் 46 விழுக்காடாக உயர இருப்பதால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியத்தார்கள் என்று கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான நபர்கள் பயன்பெற இருக்கின்றனர்.
அதுமட்டும் இன்றி மத்திய அரசு கிட்டத்தட்ட 78 நாட்களுக்கனான ஊதியத்தை கெஜட்டட் அல்லாத இரயில்வே ஊழியர்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளது. இவ்வாறு நடந்தால் 11 லட்சத்திற்கும் அதிகமான இரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு இருக்கும் நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் தங்களுக்கான அகவிலைப்படி உயர்வை அரசு எப்பொழுது உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு ஊழியர்கள் பலமுறை தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தும் அதுபற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டித்து ஊழியர்கள் பலமுறை போராட்டங்களை முன்னெடுத்தனர்.
மேலும் அகவிலைப்படி உயர்வு கோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் “தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்கள், ஓய்வூதியர்கள் அனைவருக்கும் மத்திய அரசு வழங்கியது போல 4 சதவிகித அகவிலைப்படி உடனடியாக வழங்க வேண்டும் என முதலமைச்சர்மு.க.ஸ்டாலினை அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்” என்று கூறப்பட்டிருந்தது.
இவர்கள் மட்டும் இன்றி போக்குவரத்து துறை ஊழியர்களும் அகவிலைப்படி உயர்வு குறித்து தமிழக அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனாலும் இவர்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு இதுவரை செவி சாய்த்ததாக தெரியவில்லை. அகவிலைப்படி உயர்வு மட்டும் இன்றி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்று அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கும் ஆளும் திமுக அரசு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் தற்பொழுது தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு விரைவில் தமிழக அரசு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்து இருக்கிறது.