கோவை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு

Photo of author

By Anand

கோவை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு

 

இந்த மாத இறுதியில் அதாவது டிசம்பர் மாத இறுதியில் கோவை மாவட்டத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் இரயில் இயக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

 

தெற்கு இரயில்வே துறை சார்பில் தமிழகத்தில் சென்னை முதல் மைசூரு வரையில் முதல் வந்தே பாரத் இரயில் இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை முதல் கோவை வரையிலும், சென்னை எழும்பூர் முதல் நெல்லை வரையிலும், சென்னை முதல் விஜயவாடா வரையிலும் என்று 4 வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்பட்டது.

 

மற்ற எக்ஸ்பிரஸ் இரயில்களை விட வந்தே பாரத் இரயில் குறித்த நேரத்தில் விரைவாக சென்று வருகின்றது. இதன் காரணமாக வந்தே பாரத் இரயில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரத்திற்கு இந்த மாத இறுதியில் அதாவது டிசம்பர் மாத இறுதியில் புதிய வந்தே பாரத் இரயில் இயக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

 

இந்தியாவில் தொழில் நகரங்களான தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு வரையில் வந்தே பாரத் இரயில் சேவை தொடங்குவதற்கு இரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

 

வந்தே பாரத் இரயில் இயக்கப்படவுள்ள கோவை முதல் பெங்களூரு வரையில் இரண்டு வழித்தடங்கள் உள்ளது. அதாவது சேலம், ஜோலார்பேட்டை, குப்பம் ஆகிய பகுதிகள் வழியாக இரண்டு வழிப்பாதை கொண்ட வழித்தடம் உள்ளது. அது போல தர்மபுரி, ஓசூர் வழியாக ஒற்றை இரயில்பாதை கொண்ட வழித்தடம் உள்ளது.

 

இதில் ஓசூர் வழியான இரயில் பாதை குறைவான தொலைவை கொண்டுள்ளது. இதனால் மிகவும் குறைந்த நேரத்தில் காலையில் இருந்து பெங்களூரு செல்ல முடியும். ஆனால் ஜோலார்பேட்டை வழித்தடத்தில் இரண்டு இரயில்வே பாதைகள் இருப்பதால் காலையில் இருந்து பெங்களூரு வரையில் தொடங்கப்படவுள்ள வந்தே பாரத் இரயில் இரட்டை பாதைகள் கொண்ட ஜோலார்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றது.

 

ஜோலார்பேட்டை வழித்தடத்தில் வந்தே பாரத் இரயில் செல்லும் பொழுது காலையில் இருந்து பெங்களூருவிற்கு வந்தே பாரத் இரயில் 5 முதல் 6 மணி நேரத்திற்குள் சென்றுவிடும் வகையில் இரயில்வே கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகின்றது என்று தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் விரைவில் கோவை முதல் பெங்களூரு வரை வந்தே பாரத் இரயில் சேவை தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என்று இரயில்வே வாரியங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றது.